சம்பளம்
சில வருஷத்துக்கு முன்னால் ஒரு மத்திய மந்திரி "இனிமேல் அவரவர்கள் அவரவர்களுடைய மனைவிமார்களுக்கும் செய்யற வேலைக்கு ஏற்றாற்போல் சம்பளம் கொடுக்கணும்" னு சொன்னார். அப்புறம் அவர்வீட்டுப் பிரச்சினையா என்னன்னு தெரியல்லே, அந்தத்திட்டத்தை கெடப்புலே போட்டுட்டார்.
இந்தத்திட்டம வந்துடுமோ என்று பல ஆண்களும் கவலைப் பட்டுக்கிட்டுக் கிடந்தப்போ என்நண்பர் ஒருவர் அந்தத்திட்டத்தை சந்தோஷமா வரவேற்பதா சொன்னார்.
என்னன்னு கேட்டதற்கு அவர்சொன்னார்: இப்ப நான் சம்பளம் வாங்கின உடனே அதை அப்படியே என் மனைவி எடுத்துப்பா. அதுக்கப்புறம் எனக்குப்பணம் வேணும் போதெல்லாம், அவகிட்டே கெஞ்சி, எதுக்கு வேணும் எவ்வளவு வேணும்னு கேட்டுத்தான் வாங்கணும். இந்த சட்டம் மாத்திரம் வந்துட்டா இனிமே அவளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்திட்டா போதும். அப்பாடா என்றார்.