34 எல்லாம் இன்பம் எய்தக் கடவுளை ஏத்தும் - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 18

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் காய்ச்சீர் அருகி வரலாம்)

கதிரவன் கிரணக் கையால்
..கடவுளைத் தொழுவான் புட்கள்
சுதியொடும் ஆடிப் பாடித்
..துதிசெயுந் தருக்க ளெல்லாம்
பொதியலர் தூவிப் போற்றும்
..பூதந்தந் தொழில்செய் தேத்தும்
அதிர்கட(ல்) ஒலியால் வாழ்த்தும்
..அகமே,நீ வாழ்த்தா தென்னே. 18

- தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”கடவுளைக் கதிரவன் தன் கதிர்க்கையால் தொழுகின்றான். பறவைகள் குரலெடுத்து ஆடிப் பாடிப் போற்றி வணங்கும்.

மரங்களெல்லாம் மலர் தூவிப் போற்றும். பூதங்கள் தங்கள் தொழில் செய்து வணங்கும். முழங்கும் கடல் அலைகளின் ஒலியால் வாழ்த்தும்.

அப்படியிருக்க, நெஞ்சமே! நீ வாழ்த்தாதது ஏன்? என்று இப்பாடலாசிரியர் கேட்கிறார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-May-20, 10:43 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே