கனவு பலித்ததம்மா

இதுவென்ன இப்படியோர் அழகி
இவளை இதற்குமுன் கண்டதில்லை
ஓவியமாய் சித்திரமாயோ பாத்ததுமில்லை
பின் என் கனவில் ....... இவள்
இது எப்படி சாத்தியம்
இதுதான் கனவின் ரகசியமோ
என்று கனவில் நான் சிந்திக்க
கனவும் முடிந்தது ..கண்முன்
அவள் அதே என்
கனவு கன்னிகை
உடலாய் உயிராய் அப்படியே
என் கண் முன்
நம்பமுடியலையே.....
காணாதது கண்டது இன்னும்
நினைத்து பார்க்க முடியா
அத்தனையும் கண்முண்க்காட்சி தருவது
நாம் கண்மூடியிருக்க கண்முன் கனவாய்
ஓ ஆழ்ந்த என் மனதில்
நான் உருவாக்கிய சித்திரமோ இவள்
கனவில் வந்து நெனவுமாக

நான் சிக்மண்ட் பிரூட் இல்லை
இதை அலசி பார்க்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-May-20, 3:04 pm)
பார்வை : 159

மேலே