வீரத்திருமகன்

கடும் பனியிலும் நடுங்காமல் நிற்கிறாய் சிலையாக !
சகதியில் குளிக்கிறாய் சகித்துக்கொண்டு !
சுடும் வெயில் என பார்க்காமல் சுழல்கிறாய் எதிரிகளைத் தாக்க !
வேதனை முகத்தில் தெரியவில்லை!!
வீரத்தின் அடையாளம் மறையவில்லை !!
சிரிக்க முடியவில்லை !
சிந்திக்க நேரமில்லை !!!
முகத்தில் கம்பீரம் தெரியும் எப்போதும் -ஆனால் உன்
உள்ளத்தில் வழிந்தோடும் பாசம் யாருக்கு தெரியும்?....
எங்களுக்காக பெற்றோரைப் பிரிந்தாய் !...
பெண்சாதியை மறந்தாய் !!...
பெற்றப் பிள்ளையைப் பார்க்க தவிக்கிறாய் தினம் தினம்.....
துப்பாக்கிக் குண்டு உன் நெஞ்சைத் துளைக்க !!!-உன்
செங்குருதி இம்மண்ணில் சிதற......
யாருக்கும் சொல்லாமல் விடைபெறுகிறாய் -
வீரத்தின் திருமகனே !!!....
மரணம் பெருமிதம் கொள்கிறது !!!-
உன் தைரியத்தைக் கண்டு !!!........

எழுதியவர் : Poomani (11-May-20, 3:57 pm)
சேர்த்தது : பூமணி
பார்வை : 3527

மேலே