தங்கைக்கு இரங்கல்

கேடுகெட்டவர்கள் இருப்பதாலே
கேட்பாரற்று போனாயா...
இல்லை கேவலப்பட்ட மனிதர்களின் நடைமுறைதான் பார்த்தாயா...

செங்கோலும் வலுவிழக்க
சகோதரர்கள் உயிர்துடிக்க
காத்திரும் நாளுண்டு
எங்கள் விரலிற்கும் வேலையுண்டு..

உனக்கான கேள்வியும்
அதற்கான பதிலும்
உதிரம் மேல் ஆணையிட்டு
உரக்க வெளியிடுவோம்..

சொல்லிலாவது கூறிக்கொள்கிறோம் இங்கு பெண்ணியமுண்டு...
சென்று வாடா...சகோதரிக்கண்ணு...💔😔😔😔😔😔

எழுதியவர் : ஹாருன் பாஷா (11-May-20, 9:47 pm)
Tanglish : thangaiku irangal
பார்வை : 97

மேலே