நான் ஜெயஸ்ரீ

பிண்டமாய் கருகி பிணம் என பெயர் பெற்றேன்
என்ன குற்றம் செய்தேன் என அக்னி என்னை ஸ்பரிசித்தது
பேதை பெண்ணை தீண்டியதற்கு பாரத போர் மூண்டது
என்னை ஏன் கார்முகில் கண்ணன் காணாமல் கிடக்கிறான்
முக்கண் உடைய ஈசனின் கடைக்கண் கூட என்னை காணாதது ஏன்
அரசாளும் ராஜாக்களும் லட்சத்தால் என் பிண்டத்திற்கு விலை சொல்ல
நீதி தேவதை ஏன் நிராயுதபாணியாக நிற்கிறாள்
உங்களது லட்சத்தால் நான் கொண்ட வலியை சகிக்க இயலுமா
என் கருகிய கனவுகளை திருப்பி தர இயலுமா
சிதைந்து கிடக்கும் என் சிதையில் சின்னாபின்னமாய் கிடக்கிறேன் நான்.
பெண்களை ஏமாற்றிய பித்தன் எல்லாம் கழுவேற்றப்படாமல் கிடக்க
பெண்ணாய் பிறந்ததாலோ என்னவோ நான் சிதை ஏற்றப்பட்டேன்
விடை கிடைக்காத கேள்விகளுடன் விடைபெறுகிறேன்
நான் ஜெயஸ்ரீ ...

எழுதியவர் : ஹேமாவதி (14-May-20, 2:44 pm)
சேர்த்தது : hemavathi
பார்வை : 57

மேலே