மதுக்கடய திறந்துவச்சி

மதுக்கடய தெறந்துவச்சி
மக்களெலாம் கூடவச்சி
மரணபயம் காட்டுதடா நம்மரசு - அட
வழிவிடாது சனம்திருந்த இவ்வரசு ( மதுக்கடய)

தொத்துசுத்தும் வேளையில
தொடங்கலாமா விற்பனைய
தொல்லைவந்து சேர்ந்திடுமே தெரியாதோ - அட
தொந்தரவு நாட்டுக்குத்தான் புரியாதோ? (மதுக்கடய)

காவலரு தொணையோட
கல்லாநிரப்ப போறாய்ங்க
கால்வயிறு கூடயினி நிரம்புமா ? - ஏழக்
கண்ணீரில் கொரோனாவும் கரையுமா ?? ( மதுக்கடய)

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (8-May-20, 3:58 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 58

மேலே