புது மாப்பிள்ளையின் சந்தோசம்

என்னடா புதுமாப்பிள்ளை ரொம்ப உற்சாக இருக்கிற? விசிலடிக்கத் தெரியாத நீ இப்ப விசில்லயே காதல் பாட்டெல்லாம் பாடற? என்ன விசயம்டா சொல்லுடா பொன்குமார். பொன்மகனே (குமார் = மகன், இளவரசன், பையன்) பொன்இளவரசா, சொல்லுடா.
@@@@@@
அட மன்ராஜ், என்னோட மகிழ்ச்சியை வார்த்தையால சொல்ல முடியாதுடா.
@@@@@@
முடிஞ்சவரை சொல்லுடா கல்யாண இளவரசா.
@@@@@
இளம் மனைவிகள் தங்களோட கணவன்மார்களை எப்பிடிடா கூப்படறாங்க?
@@@@@@@
"வாடா, போடா, என்னடா, எதுக்குடா, முட்டாள், மடையா. துணிகளைத் துவைடா, மாவு ஆட்டுடா, நேரத்தில சமைக்க கத்துக்கடா" ன்னு ரொம்ப மரியாதையாப் பேசுவாங்க.
@@@@@@
சரி அவுங்க கணவன்மார்கள் எப்படி பேசுவாங்க..
@@@@@@
" மனைவி பேரச் சொல்லிக் கூப்படறது எப்பவாவது. பொதுவா "என்னாங்க, வாங்க, போங்க , சொல்லுங்க, சரிங்க. செய்யறங்க. இனிமே ஒழுங்க இருந்துக்கிறங்க. மத்து,சப்பாத்திக் கட்டை, பூரிக்கட்டை எல்லாம் எடுத்து வீசாதீங்க"னு சொல்லுவாங்க. சிரி உன்னோட சந்தோசத்துக்கான காரணத்தைச் சொல்லுடா பொன்மகனே.
@@@@@@@
என்னோட மனைவி எல்லாப் பெண்களையும் விட வித்தியாசமான பொண்ணுடா. என்னை "வாடி, போடி, என்னடி, எதுக்குடி, ஒதைப்பன்டி, ஒழுங்கா இருடி, வீட்டு வேலையெல்லாம் நீதான்டி செய்யணும்" இப்படி எல்லாம் சொல்லுவாங்கடா. அவுங்க என்னை 'டி' போட்டுக் கூப்படறது எனக்கு ரொம்ப பெருமையா இருக்குதடா.
@@@@@@
நீ குடுத்துவச்சவன்டா பொன் இளவரசா. வாழ்க.

எழுதியவர் : மலர் (12-May-20, 9:26 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 72

சிறந்த நகைச்சுவைகள்

மேலே