இன்று நான் பார்த்த குருவி

பல வருடங்கள் களைத்து என்வீட்டு
மாமரத்து கிளையில் ஒரு குருவி ......
நானோ முகமூடி மனிதனாய்
மூக்கும் வாயும் முக கவசம் மூட
வீட்டை விட்டு வெளி வராது
'பால்கனி ' கம்பி வழியாய்க்
குருவியைப் பார்த்தேன்...அது
என்னைப் பார்த்து நகைத்ததோ.....
மனிதா என்னை ஒட்டுமொத்தமாய் துரத்திவிட்டாய்
இப்போது இன்று உன் நிலையைப் பார்
வெளியில் செல்ல முடியாது
கூண்டு கிளிபோல் அடைபட்டு கிடக்கின்றாய்
வீட்டில்...... இது இயற்கை உனக்கு அளித்த
தண்டனையா தெரியாது ..... ஆனால் நான்
உனக்காக இறைவனை வேண்டுகிறேன்
உன் விடுதலைக்காக இந்த கொரோனாவிடமிருந்து!

என்பதுபோல் இருந்தது
குருவி பறந்து சென்றது
செய்தி தெளிவித்து,,,,,
கூனி குறுகி நான்
வீட்டுக்குள் திரும்பினேன்

எழுதியவர் : (14-May-20, 7:22 pm)
பார்வை : 128

மேலே