மன்னிப்பாயா என்னை மாங்கனியே

என் கையில் மாங்கனி
எத்தனை அழகு இக்கனிக்கு
தங்கத்தில் பதித்த மாணிக்கமோ
என மஞ்சள் பொன்னிறத்தில்
காணும் கொஞ்சம் சிவப்பு
இதோ உணர்கின்றேன்
இதுதான் அமிர்தமோ என
நாவைவிட்டு அகலா
நினைவிலே நிற்கும் இனிப்பு

மாங்கனியே கனியாகும் முன்
நீ கதையாய் இருந்தாய்
வலுவான பச்சைக் காயை
காயிலும் நீ அழகே மாவே

காயாகும் முன் நீ
மலராய் இருந்தாய்
அழகு மலராய்

இப்படி மலராய் மொட்டாய்
கதையாய் கனியாய்க் கனிந்த
மாவே உன் வாழ்வில் இப்படி
எல்லாப் பருவத்திலும் அழகாய்
ஜொலிக்கின்றாய்.....

கொஞ்சம் என்னைப் பார் மாம்பழமே
நானும் குழந்தையாய், சிறுமியாய்
பருவக் கன்னியாய் மங்கையாய் இருந்தேன்
எல்லோரும் அழகியென்றே அழைத்திட....இப்போது
இப்போது என் நிலையைப் பார்
பொலிவிழந்த தொய்ந்த முகம்
கவலைப் பதிந்த கோடுகள் தாங்கிய நெற்றி
இதுவே என் மூப்பு .....
மூப்பில் என்னைப் பேணா என் பிள்ளைகள்
இங்கு முதியோர் இல்லத்தில் விட்டு சென்றனர்

மூப்பில் மனிதன் அமைதி இழந்து
அல்லல்படுகிறான் .... நீயோ மாவே
காவாய் இருந்த இளமையைப் பருவம் பொய்
கனியாய் ..... அழகின் அழகாய் இருக்கின்றாய்
உன்னை மரத்தில் காண கண்கள் ஆயிரம் வேண்டும்
மனமில்லாமல் சுயநலத்தில் உன்னை உணர்கின்றேன்
உன் ருசியை அன்பவிக்க
மன்னிப்பாயா என்னை மங் கனியே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-May-20, 7:09 pm)
பார்வை : 82

மேலே