மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அழகே....
இன்னையோட ஓ வயசு
ஒண்ணுதானே கூடிடுச்சு....
வயசோட அழகும் கூட
கைகோர்த்து ஏறிடுச்சு....
மனைவியா நீ வந்து
என் மடி சேர்ந்த நாளவிட....
மகராசி இப்ப நீ
அழகாதான் ஆகிபுட்ட....
உன் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல
வந்துநின்ன வேளையிலே....
என் மனசுகுள்ள
என்ன நானே
ஒருகேள்வி கேட்டுகிட்டேன்....
எனக்காகத்தான் பொறந்தேன்னு
நீ.....
ஆயிரமுற சொல்லியிருப்ப...
உன்ன....
எதுக்காகத்தான் பொறந்தோம்முனு
என்னைக்காவது அழவச்சிருப்பேனோ ..?
ஒருவேள வச்சுருந்தா....
மன்னிப்போடு
என் மனைவிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..