தலைப்பு தேவையில்லை
தலைப்பு தேவையில்லை
சிற்பியின் மனக் கண்களை
சிலையின் கண்கள் வெளிப்படுத்தாது
பேரன்பின் வெளிப்பாடு வார்த்தைகளில்
வற்றி விடக்கூடும்
சலனமற்ற வாழ்வின் வெளியை
தவறான புரிதலொன்று கலைக்கக்கூடும்
களங்கமற்ற குழந்தை மனதை
காலம் கடத்திச் சென்று விடும்
மாண்புமிக்க மாமனிதர்கள்
கள்ளம் கபடமற்ற சிரிப்புகள்
அன்பைப் பொழியும் கண்கள்
பேதமற்ற வாழ்வு தரும் பெரும் மகிழ்ச்சி
கதைகளில்
வரும்
நேர்மையும் வீரமும் கொண்ட பேரரசர்கள்
கவிதைகளில்
வரும்
அன்பைக் கொண்டாடும்
பேரழகிகள்
மென்மையும் மேன்மையுமான
வாழ்வியல் முறைகள்
ஒவ்வொரு கணமும் ஆனந்தமாய்
ஒவ்வொரு எண்ணமும் சுகமானதாய்
ஒவ்வொரு வார்த்தைகளும் மதிப்புள்ளதாய்
மானுட வெளியெங்கும் மகிழ்ச்சியான மனிதர்கள்
அகங்காரத்தில் உதித்த
ஆபாச வார்த்தை ஒன்று
உலுக்கி எழுப்பியது
அலுவலகத்தில் அமர்ந்திருந்தவனை
"சூரியகாந்தி"
சதீஷ்குமார்