மேகத்தில் விதைகளை

மேகங்கள் செல்லும் உயரத்தினை
மிதமான அளவிற்கு குறைத்திடுவோம்
வேண்டிய தேவைக்கு பயன்படுத்த
விஞ்ஞானத்தின் துணையை கையாள்வோம்
மேகத்தில் விதைகளை கலந்துவைத்து
மேன்மையான மரங்களை வளர்த்திடுவோம்
தாகத்தால் தவிக்கின்ற உயிர்களுக்கு
தரமான தண்ணீரை பகிர்ந்து கொள்வோம்
கரம்பான நிலங்களை வளம் செய்ய
கனிம மழைநீரை வரவழைப்போம்
தரணி முழுவதையும் சமம் செய்வோம்
தண்ணீரால் இயந்திரத்தை இயக்கிடுவோம்
பருவ மழைகளை மறந்திடுவோம்
விரும்பும் பொழுதெல்லாம் பொழியவைப்போம்
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (22-May-20, 1:37 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 47

மேலே