கருப்பு நிலா அவள்

இரவிலும் கருப்பு நிலவாய்
ஒளிர்ந்தது அவள் முகம்
அதில் அவள் சிரிப்பு
மலர்ந்த கொவ்வை இதழாகளிடையே
முல்லைச்சரமாய் தெரிந்தது
காவிரி நதி கரையில்
பௌர்ணமி இரவில் நிலவு
வரும் முன் நான் கண்ட
கருப்பு நிலா இவள்
இவள் அழகைப் பார்த்து
அந்த பௌர்ணமி நிலவும்
உதயமாகாது இருந்ததோ...

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-May-20, 6:58 pm)
Tanglish : karuppu nila aval
பார்வை : 65

சிறந்த கவிதைகள்

மேலே