தம்பி 🌹
தம்பி 🌹
உன்னை நினைத்தவுடன் என் கண்களில் கண்ணீர் வருகிறது.
ஒரு மரத்து கிளிகளாக வாழ்ந்தோம்.
ஆடி, பாடி மகிழ்ந்தோம்.
வாழ்வாதாரம் காரணமாக
இறை தேடி பல மரம் தேடி சென்று இன்று பிரித்து கிடக்கிறோம்.
அந்த சிறு வயது நினைவுகள்,
நீ செய்த சேட்டைகள்,
நீ என்னிடம் இட்ட சண்டைகள்,
நீ என் மீது பொழிந்து பாசம்,
எல்லாம் மறக்க முடியாதவை.
அது ஒரு நிலா காலம்.
மறக்க இயலாது வசந்த காலம்.
பணம் நிறைய இல்லை
ஆனால் மனநிறைவு நிறையவே இருந்தது.
அந்த நாட்கள் இனி வரவே வராது.
மாற கூடியதே காலம்.
மாற்றம் ஒன்றே மாறாதது.
திரை கடல் ஓடி திரவியம் தேடு
கடல் தாண்டி வேலை சென்றுள்ள என் உடன்பிறப்பே
பத்திரம்.
பாங்காய் நடந்து கொள்.
பணியை கவனத்துடன் செய்.
பாசத்தை நெஞ்சில் சுமக்கும் நீ, சில சமயம் கண் கலங்குகிறாய்.
பாசத்துக்கு ஏங்குகிறாய்.
காலம் அது வெகு விரைவில் ஓடி விடும்
கவலை படாதே.
பக்குவபட்டவனாய் நீ தாயகம் திரும்ப வேண்டும்.
என்றும் உன் நலத்தில்
அக்கறையுள்ள
என்றும் உன் நினைவுடன்
உன் சகோதரன்.