சந்தேகத்_தீ
******************
கண்ணை சிமிட்டாமல் சுவரில் மாட்டிய கல்யாணப் படத்தையே உற்று நோக்கினான் உயிரற்றவனாய் "பரணி". அவன் பார்வையை அறுத்தவாறு ஓடி வந்து "அப்பா!... இன்னும் ஏனப்பா அம்மா வரவில்லை? எனக்கு பசிக்கிறது" என்று துடிதுடித்தான் ஐந்து வயதான "விமல்".
விமலை அருகில் அழைத்து அமரவைத்து, வீட்டின் வாசலையே பார்த்தான் விடியல் கிடைக்குமா என்று. அமாவாசை இருளில். மூழ்கி இருக்க நினைவுகளும் மெல்ல மெல்ல வலம்வரத்தொடங்க பரணியின் மனமும் வேதனை கொள்ள
ஏன்? ஏன்? இப்படியொரு பெரிய தண்டனையை தந்து விட்டு போனாள். ஆஆ முடியவில்லையே கடவுளே.
அன்றைய சண்டையிலே ஏன் எனக்கு அறிவு மங்கிப்போனது. என்னிலே தானே தவறு அதற்கு இப்படிப் பெரிய தண்டனை தந்து
விட்டுச் சென்றுவிட்டாளே. இனி என்ன தான் செய்வேன் நினைத்த வண்ணம் கடந்த காலத்தை நோக்கி நகர்ந்து சென்றான்
பரணி முதன் முதல் தன் மனைவியான லாயனவை சந்தித்து கொண்ட இடம் பல்கலைக்கழகம் அங்கே சலனம் இன்றி அமைதியாக பயந்த சுபாவத்துடன் திரிந்து கொண்டு இருந்தாள். .அந்த அமைதி பரணிக்கு
பிடித்து விடவே எப்படியாவது அந்த பெண்ணோடு கதைத்துவிட வேண்டுமெனக் கருதி லயானாவின் தோழி மூலம் தொடர்பை ஏற்படுத்தி நல்ல உறவாகி உயிரான இதனால் இருவருக்கும் காதல் மலர வசந்த காலப் பூக்களைப் போல வலம் வந்து கொண்டிருந்தனர்.
கால ஓட்டம் இருவரையும் பிரிக்க முனைந்தபோதும் காதலில் லாயன கொண்ட விடாப்பிடியால் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
பின்னர் இருவரும் இல்லற வாழ்க்கையை சந்தோசமாகத் தொடங்கினார்கள். பின்னர் ஒரு நாள் பரணியின் நண்பன் குமார் இவர்களுடைய வீட்டுக்கு வந்து இருந்தான். அப்பொழுது அவன் தெரிந்தோ தெரியாமலோ வெடியொன்றைக் கொழுத்தி விட்டுப் போனான்
நண்பா என்னடா நீ இப்பவும் எஸ்ஸோடு தொடர்பு வைத்து இருக்கிறாய் போல. பணம் அரைவாசியும் அவளுக்குத்தான் போகுதோ? சிரிப்போடு நகைச்சுவையாகக் கூறிவிட்டுச் சென்றுவிட்டான்.
லாயனவிற்கும் சந்தேகம் வரத்தொடங்கியது. இவரும் உண்மையாகவே
யாரோடும் தொடர்போ? அதுதான் அடிக்கடி என்னோடு கோபப்படுகிறார் போல. முன்பு மாதிரியில்லை வீட்டிலே சமைத்தாலும் சாப்பிடுவதும் இல்லை. கேட்டால் சொல்லுகிறார் பசிக்கவில்லையென்று. யோசித்தவள் ஒரு முடிவு எடுத்துக்கொண்டாள்.
அதன் பின்பு பரணியின் நடவடிக்கையில் தலை போடத் தொடங்கினாள். இது பரணியின் எரிச்சலைக் கூட்டியது.
இது முற்றிப்போகவும் பலநாள் கைகலப்பு நடந்தேறியது.
இப்படியிருக்கையில் ஒருநாள் மாலை ஆறு மணியளவில் தன் குழந்தையை நித்திரை செய்ய வைத்துவிட்டு
நான் அம்மாவிடம் செல்கிறேன். பிள்ளையைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
என்னைத் தேட வேண்டாம். இப்படிக்கு என்றவள் தன் பெயர் போடமால் கணவருக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்றுவிட்டாள்.
மனைவியின் பிறந்தநாள் இன்று அவளை வெளியில் கூட்டிச் சென்று சந்தோசப்படுத்த வேண்டும். அவளிடம் மன்னிப்புக் கேட்டு விடவேண்டும் என்று அவசரமாக வேலையை முடித்து வீடு வந்தான் பரணி.
மறுபக்கத்திலே அவனுடைய தொலைபேசிக்கு ஒரு அழைப்பு நான் காவல்துறை அதிகாரி பேசுகிறேன். இன்றொரு இறந்த உடல் கிடைத்துள்ளது. அது உங்கள் மனைவி போல இருக்கிறது. உங்களால் வந்து பார்க்க முடியுமா? ஒரு நிமிடம் பொறுங்கள் இதோ வந்துவிடுகிறேன். என்று கூறி விலாசத்தைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டான்.
எழுதியவர் கவி
அகிலன் ராஜா