நிலாரேகை

நிலாரேகை இங்க வாம்மா.
@@@@@@
யாரை அண்ணா கூப்புடறீங்க?
@@@#@
நிலாரேகை வீட்டில் இல்லையா?
@@@@@@
நிலாவுக்கு கைகள் இருக்குதா? இல்ல, கால்கள் இருக்குதா? அப்பறம் எப்பிடி நிலாவுக்கு ரேகை இருக்கும்.
@@@@@@
இருக்குதே. நாஞ் சொல்லற நிலாவுக்கு ரண்டு காலு, ரண்டு கை இருக்குது. கைகள்ல ரேகை இருக்குது. பாதத்தின் அடிப்பகுதியிலும் ரேகை இருக்குது.
@@@@@@
என்ன அண்ணே குழப்பீறீங்க?
@@@@@@
உஞ் செல்லப்பொண்ணு எங்க போயிட்டா?
@@@@@@
கடைக்கு போயிருக்கிறா.
@@@@@@
ஆமாம் அந்த 'நிலாரேகை'....?????
@@@@@@
உம் பொண்ணுப் பேரு என்ன?
@@@@@@@
என் கணவர் டெல்லிக்கு போயிட்ட சமயத்தில எனக்கு பிரசவ வலி ஏற்பட்டுச்சு. நீங்களும் அம்மாவுந்தான் என்னை மருத்துமனையில சேத்தீங்க. அவ பொறந்தும் நீங்க ரண்டு பேருந்தான் அவளை முதலில் பாத்தீங்க. நீங்க வளத்த பொண்ணு. அவ பெயர்சூட்டு விழாவை நடத்தி வச்சதே நீங்கதான். அவளுக்கு வைக்கப்போற பேரைத்தான் நானும் என் கணவரும் முடிவு பண்ணீனோம். தினமும் அவளை ஒரு தடவையாவது பாகாகாம உங்களால இருக்கு முடியாது. நீங்க பேராசிரியர் தான். முப்பத்தஞ்சு வயசிலேயே ஞாபகமறதி பேராசிரியர் ஆயீட்டங்களா?
@@@@@@
இல்லம்மா மங்கை. எஞ் செல்லத்துப் பேரை நான் எப்படி மறப்பேன்.
@@@@@
உன் வாயாலே ஒரு தடவை அவள் பேரைச் சொல்லுமா.
@@@@@
சரி. சொல்லறேன். சசிரேகா. போதுமா?
@@@@#@
அவளுக்கு வயசு பத்து ஆகுது. அவள் பேருக்கு அர்த்தம் தெரியுமா?
@@@@@#
எனக்கும் தெரியாது. அவருக்கும் தெரியாது.
@@@@@@
எனக்கும் தெரியாது. எங்க பக்கத்து வீட்டு இந்தி ஆசிரியர் தான் அந்தப் பேருக்கு அர்த்தம் சொன்னாரு.
@@@@@
என்ன அர்த்தம் சொன்னாரு.
@@@@@@
நான் உங்க வீட்டில நுழைஞ்சதும் என்ன கேட்டேன்?
@@@@@
நிலாரேகை எங்கனு கேட்டேன்.
@@@@@
அதுதான் நம்ம சசிரேகா பேருக்கான அர்த்தம்.
@@@@@
என்ன அண்ணே சொல்லறீங்க?
@@@@@@@@
சசி = நிலா. ரேகா = ரேகை.
@@@@@@@
அர்த்தம் தெரியாமலே எஞ் செல்லப்பொண்ணுக்கு 'சசிரேகா'ன்னு பேரு வச்சுட்டோமே.
நாளைக்கே அவருகிட்ட சொல்லி ஒரு வழக்குரைஞர்கிட்டச் சொல்லி அவள் பேரை சட்டபூர்வமா 'நிலா'ன்னு மாத்தி அரசிதழில் வெளியிட ஏற்பாடு செய்யச் சொல்லறேன் அண்ணா.
■■■■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆●●●●◆
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்.

எழுதியவர் : மலர் (26-May-20, 10:48 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 60

மேலே