பேச்சாளர்கள் ஏலம்

ஒரு கட்சியின் அறிவிப்பு
■■■■■■■■■■■■■■■
எங்கள் கட்சி மிகவும் சிறிய கட்சி. வளர்ச்சி அடையாத கட்சி. ஆனாலும் எங்கள் கட்சியில் அருமையான பேச்சாளர்களை உருவாக்கியிருக்கிறோம். அவர்களுக்கு தரமான பயிற்சி அளித்திருக்கிறோம்.
@@@@@@
தரக்குறைவாகப் பேசுவது, இழிவாகப் பேசுவது பொய்யான தகவல்களை சமூக ஊடகங்களில் சொற்பொழிவாக வீடியோ பதிவுகளை வெளியிடுவது போன்ற பயிற்சிகளை அளித்து ஐந்து கட்ட தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்கியிருக்கிறோம். வேறு கட்சிகளின் இரண்டாம் கட்டத்தலைவர்களை விலைபேசி கட்சிமாற வைக்கும் பணியைச் செய்யும் பயிற்சியும் கொடுக்கப்பட்டுள்ளது.
@#@@@@@@
இவ்வளவு சிறப்புகள் நிறைந்த எங்கள் பேச்சாளர்களை ஒவ்வோரு வாரமும் ஞாயிறன்று , (மட்டை விளையாட்டு (Cricket players) வீரர்களை ஏலம் விடுவது போல) எங்கள் கட்சி அலுவலகத்தின் உள்ளரங்கில் நடைபெறும். நுழைவுக்கட்டணம் ஒரு லட்சம் ரூபாய். அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி.
@@@@@@@
குறைந்தபட்ச ஏலத்தொகை பத்து லட்சம். ஏலம் எடுக்கப்பட்ட பேச்சாளர் பற்றிய விவரங்களை ஏலம் எடுத்தபின் ஊடகங்களுக்குத் தெரிவிக்கக் கூடாது. அவர்கள் பேச்சாற்றலை ஏலம் எடுக்க வந்தவர்கள் காதுகுளிரக் கேட்டபின்பு ஏலப்போட்டி துவங்கும். யார் திறமையாக மிகவும் தரக்குறைவாக, இழிவாக, அதிகக் கூச்சலிட்டு, பொய் மூட்டைகளை அவிழ்த்து கொட்டுகிறார்களோ அதற்கு ஏற்ப ஏலம் விடப்படுவார். அதிகத் தொகைக்கு ஏலம் எடுப்பவரின் கட்சியில் பணியாற்ற ஒதுக்கப்படுவார்.
@@@@@@@
நாங்கள் வருமான வரி கட்டுவதில் உறுதியானவர்கள். எனவே எந்தக் கட்டத்திலும் பணம் பெறப்படமாட்டாது. காசோலையை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்..பணம் எங்கள் வங்கிக் கணக்கில் ஏற்றப்பட்டபின்புதான் ஏலம் எடுக்கப்பட்டலர் முறைப்படி ஏலம் எடுத்தவரின் கட்சியில் இணைய உரிமையுள்ளவர். அவருக்கு மாதச் சம்பளம் முதலியன பேச்சாளரிடம் பேசி முடிவு செய்து கொள்ளலாம்.

எழுதியவர் : மலர் (26-May-20, 4:42 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : pechchaalargal elam
பார்வை : 117

மேலே