தத்தி நடக்கும் தளிரே

தத்தி நடக்கும் தளிரே
**************************
தத்தி நடக்கும் தளிரே
தயக்கமின்றி வண்ணங்களாய் இழுத்து விடு
நித்தம் மனமும் அழகாய் மிளிரட்டும்
தித்திக்கும் தேன் சுவையே
தத்தி நடக்கும் தளிரே
தாண்டி வந்து செயலோடு நட
நீண்டு வந்தே வெள்ளியும் முளைக்கட்டும்
உன் பிஞ்சு விரல்களை கொஞ்சி விடவும்
உந்தன் வளர்ச்சியில் சிரிப்பும் விளையவும்
என்றும் நம் முன்னே நீயும் வளரவும்
எத்திக்கும் தேன் பரவி செல்லவும்
தோள் சுமையும் குறைந்து போகும்
அகிலன் ராஜா கனடா

எழுதியவர் : அகிலன் ராஜா (29-May-20, 12:03 pm)
பார்வை : 49

மேலே