தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் 😗

வருடங்கள் நான்கிற்கும்

வண்ணங்கள் கொடுத்தவள்-என்

எண்ணங்கள் அனைத்தையும்-நான்

எண்ணும் முன்னே அறிபவள்👭

கண்ணோடு இமை போல்-என்றும்

என்னோடு இருப்பவள்👭...

எண்ணற்ற பொழுதுகள்- நம்

எண்ணிலடங்கா நினைவுகள்-அதை

சொல்லில் அடக்க முடியுமோ?-அதை

சொன்னால் தான் முடியுமோ?...

நாட்கள் அது நகரலாம்

நண்பர்கள் பலர் சேரலாம்

புகைப்படத்தில் முகம் அறிந்து

புன்னகைக்கும் காலத்திலும்

ஒருத்திஇவள் முகம் மட்டும்😊

தனித்திருக்கும் மனதினிலே😊😊-நாம்

இணைந்திருந்த காலமதும்

இனித்திருக்கும் நினைவினிலே❤....

எழுதியவர் : சுவாதிகுணசேகரன் (31-May-20, 9:47 am)
பார்வை : 602

மேலே