இருக்கட்டும்
படித்தது
கொஞ்சமாக இருந்தாலும்
படித்ததை
நடைமுறைப்படுத்துவது
அதிகமாக இருக்கட்டும்
செய்த உதவி
சிறியதாக இருந்தாலும்
அதைப் பாராட்டும் விதம்
பெரிதாக இருக்கட்டும்
உடல்
பலவீனமாக இருந்தாலும்
உள்ளம்
பலம் வாய்ந்ததாக இருக்கட்டும்
வாழ்க்கை
வறுமையாக இருந்தாலும்
எண்ணங்கள்
வளமானதாக இருக்கட்டும்
இளமை
குறைந்து கொண்டே இருந்தாலும் நம்பிக்கை
குறையாமல் இருக்கட்டும்...!!!
கவிதை ரசிகன்