வண்டிசையில் தேன் மலர்களாடக் கண்டேன்

பூவிற்கு வண்ண இதழ்கள் பலவைத்தான்
பூவினுள் தித்திக்கும் அற்புதத்தே னைவைத்தான்
வண்டிசை யில்தேன் மலர்களா டக்கண்டேன்
கண்ணில் மணியாடக் காற்றில் குழலாட
பெண்ணேநீ வந்திட பூக்கள் சிலையாக
மண்மீதில் நிற்பதைக் காண் !

---- பல விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (1-Jun-20, 11:07 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 48

மேலே