306 பொறாமைத் துன்பத்தால் பொருந்திடாது அப்பொருள் – பொறாமை 4

கலி விருத்தம்
(மா விளம் மா விளம்)

ஆண்டெ லாம்பிற ராக்க நோக்கியே
மீண்டு மீண்டுநெட் டுயிர்ப்பு வீங்கினுந்
தாண்டி யவர்தனந் தாழ்ந்துன் கைமிசை
ஈண்டுச் சேருமோ இதய மேசொலாய். 4

– பொறாமை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

ஆண்டு முழுவதும் பிறர் செல்வ வாழ்வைக் கண்டு மீண்டும் மீண்டும் பெருமூச்சு விட்டுப் பொருமினாலும், அவர்தம் செல்வம் அவரைத் தாண்டியும், கீழிறங்கியும் உன் கைக்கு இங்கே வந்து சேருமா என்று சொல், நெஞ்சமே!” என்று கேட்கிறார் இப்பாடலாசிரியர்.

ஆக்கம் - செல்வம்; வாழ்வு. ஈண்டு - இங்கே
நெட்டுயிர்ப்பு - பெருமூச்சு.
வீங்கினும் - பொருமினாலும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Jun-20, 9:43 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே