தொடல் சுகம் தரும் தென்றலில் சிலிர்க்கும் அவள்

மடல் விரியும் ரோஜா மலர்
மங்கை அவள் அழகு
கடல் எழில் நீலம்
அவள் கண்களின் அழகு
உடல் அசையும் நேர்த்தியில்
அவள் கொடி அழகு
கடல் தரும் முத்துக்கள்
அவள் புன்னகை அழகு
தொடல் சுகம் தரும் தென்றலில்
சிலிர்க்கும் அவள் முழுதும் ஓர் இயற்கை அழகு !

எழுதியவர் : கவின் சாரலன் (5-Jun-20, 8:58 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 1962

மேலே