அன்னை

அன்னை

ஒரு வயதைத் தாண்டிய
மழலை ஒற்றைப் பருக்கையை
கூட ஒழுங்காக சாப்பிடவில்லையே
என்ற ஏக்கத்தில் அன்னை

கவனமோ விளையாட்டில் செல்ல
உண்ண மறுத்து அடம்பிடித்தது
அந்த மழலை இருவரின்
முகத்திலும் ஒரு வித சோர்வு

சாப்பிடாத குழந்தை இளைத்து
விடுமோ என்ற கவலை அன்னைக்கு
எதுவும் வேண்டாம் என்னை விட்டுவிடு
என்கிற என்னமோ மழலைக்கு

தண்ணீரைப் பாத்திரத்தில் ஊற்றி
விளையாடக் கொடுத்து விட்டு
அந்த பராக்கில் ஒரு பிடி சோறு
உண்ணாதா? என்ற தவிப்பு அன்னைக்கு

என்ன கொடுத்தாலும் உண்ணவே
மாட்டேன் என்னை விட்டுவிடு
என்று பிஞ்சுக் கைகளால் முகத்தை
மூடிவிட்டு சிரிக்கின்ற மழலை

பார்க்கும் போதுதான் உணர்ந்தேன்
அன்னையின் பாசத்தின் தன்மையை
உண்மையிலேயே இந்த உலகத்தில்
அன்னைக்குப் பின்புதான் எல்லாம்

எழுதியவர் : Ranjeni K (5-Jun-20, 2:53 pm)
சேர்த்தது : Ranjeni K
Tanglish : annai
பார்வை : 829

மேலே