சிறகை விரிப்போம்
கண் இமைக்கும் கண பொழுதில்
கண் அயர்ந்தேன் கனவு தனில்
சிட்டாக சிறகிணைத்து
எட்டும் தூரம் பறந்து சென்றேன்
ஏற்ற தாழ்வு ஏதுமற்ற
ஏழ்மை என்ற வார்தை அற்ற
எண்ணம் தனில் கலங்க மற்ற
எல்லை இல்லா வானை கண்டேன்...
மண் ஆசை மதியில் கொண்ட
மனிதரோ அம் மண்ணில் இல்லை
பொன் ஆசை பொதிந்து போன
பொல்லாரும் தானோ இல்லை
பெண் ஆசை கொண்டார் உண்டு - அதுவும்
பேரன்பு கொண்ட பெண் ஒருத்தியின்பால்....
அடிமைதனம் செய்வதற்கும்
ஆளுமையில் ஆள்வதற்கும்
அன்பென்ற சொல் ஒன்றே
அடித்தளமாய் அமைந்ததங்கு ...
மெல்ல மெல்ல சிறகிழந்து
மென் உணர்வும் மேல் படர்ந்து
கனவினையே கலைத்து விட்டு
கண் விழித்து பார்கின்றேன்
வஞ்சகத்தை நெஞ்சில் கொண்டு
வாழும் நம் வாழ்வினையும்
அன்பதனை உதிர்த்து விட்டு
அறியாமையை அணைத்து கொள்ளும்
அறிவிழந்த அகிலத்தையும்...
பகுத்தறிவு என்றிருக்க - நாமும்
பாழ்பட்டு போவதேனோ?...
கருணை தனில் காதல் கொண்டு
இரக்கமதிமல் இறைவன் கண்டு - பல
சிறுமை தனை உடைத்தெறிந்து - மன
சிறகினையே விரிக்கலாமே.......
- சுவாதி குணசேகரன்...