ஏடாகூடாக் கவிதைகள்
ஏடாகூடாக் கவிதைகள்
2020 பதாகை இணைய இதழில் வெளிவந்த கவிதை
1. அவசர அவசரமாய்
எல்லாவற்றையும்
ஒளித்து வைக்கிறேன்
யாரோ கதவு தட்டுகிறார்கள்
2.. ஐந்து நாட்களுக்குப் பின்
கூரையை தாண்டி
வெம்மை இறங்கிய
நற் பகலில் சூழல் அமைந்தது
அமைதிப்படுத்த மறந்த கைபேசி
ஒலித்துக் கெடுத்தது