பக்கத்து வீடு

பக்கத்து வீடு

காற்றுவெளி கலை இலக்கிய இதழில் 2019 ஆவணி வெளிவந்த கவிதை

1. புழக்கடையில் புழங்கும் போதெல்லாம்
முதுகில் ஊர்வதாகவே உணர்கிறேன்
உன் பார்வையை.
எப்போதும் திறந்திருக்கும்
கதவிடுக்கின் வழியேயும்
சாளரங்களின்
திரைச்சீலை விலகலிலும்
வெறிக்கும் பார்வை
நிலைத்திருப்பதாக பிரம்மை.
எதிர்பாராத எதிர்படுதலில்
எதேச்சையான பாவனையில்
நீ கேட்கும் கேள்விகளுக்கு
“ஆமாண்ணே இல்லண்ணே” என
பதிலளித்துத் தொலைக்க வேண்டியுள்ளது

2. பலகாரம் தரும் சாக்கில்
வீடு நுழைந்து
பார்வையால் துலாவுகிறார்கள்
திரைச்சீலை தாண்டியும்

3. மனம் விரும்பும் பாடல்களாக
ஒலிக்க விடுகிறான்
நிறைய வேலை கிடக்கிறது
அவரும் வீட்டில் இருக்கிறார்

எழுதியவர் : செவல்குளம் செல்வராசு (7-Jun-20, 12:12 pm)
Tanglish : pakkaththu veedu
பார்வை : 97

மேலே