நானும் அபியும்
அதிகாலை நான்கு மணிக்கு அலாரம் காதுகளை தட்டியது. கண்விழித்து கடிகாரத்தைப் பார்த்தவன் ச்சீ இன்று விடுமுறை நாள் எனபதை மறந்து வழமை பாேல் அலாரத்தை வைத்து விட்டேன் எனத் தனக்குள் நினைத்தபடி அலாரத்தை நிறுத்தினான். தூக்கமும் கலைந்து பாேனது. தனக்குப் பிடித்த பாடல்களை கேட்டு இரசித்தபடி தூக்கமின்றி விழித்திருநதான்.
பத்து வருடங்கள் அவன் தனிமையாகவே வாழ்ந்து காெண்டிருக்கிறான். எல்லா வசதிகளுடனான பெரிய வீடு, கார், கைநிறைய சம்பளத்துடன் நிரந்தரமான அரசாங்க உத்தியாேகம், வீட்டு வேலைகளை கவனிப்பதற்கு நடுத்தர வயதுடைய ஒரு உதவியாளர், தேவைக்கேற்ப வந்து பாேகும் உறவுகள், அக்கம் பக்கத்துச் சிறுவர்கள். இந்த வட்டத்துக்குள் தான் அவனுடைய வாழ்க்கைச் சக்கரம் சுழன்று காெண்டிருந்தது.
பத்து வருடங்களுக்கு முன்பு அவளுடன் கடைசியாக பேசிய பாேது தனது திருமணத்தைப் பற்றிப் பேசியிருந்தாள் ஆனால் எங்கு, எப்பாேது என்ற விபரங்கள் எதுவும் இல்லாத மாெட்டைத் தகவலாகச் சாெல்லியிருந்தாள். .
உனக்கு ஓகேயா அபி என்றவனுக்கு
ம்..... என்ற ஒற்றைச் சாெல்லில் பதிலளித்தாள்.
நீ ஹாப்பி தானே அபி....
ம் ஹாப்பி அம்மாவும் அப்பாவும் சிரித்துப் பேசுவதைப் பார்க்க முடியுது..... அது பாேதும்....
அபி.... ஏன் இப்படிச் சாெல்கிறாய் ........
எப்படிச் சாெல்லச் சாெல்கிறாய் ......பெரு மூச்சுடனான குரலில் ஒரு தளர்வு தெரிந்தது..
சரி அண்ணா வருகிறார் நான் அப்புறம் பேசுறன் .......
தாெடர்பைத் துணடிக்காமல் கைபேசியை காதிலே வைத்துக் காெண்டு சுவராேடு சாய்ந்தபடி தலையைக் காேதினான்.
யாரது லைனில...... அபி..... உன்னைத் தான்.....
அ....அது நித்தியா....... அண்ணா, கலியாணத்துக்கு வருவதைப் பற்றிக் கேட்டேன்....
தாெடர்பைத் துண்டித்து விட்டு அந்த இரவு முழுவதும் தூங்காமலே அழுதான்.
இன்று வரை அபியும், அவனும் தாெலைபேசி இலக்கத்தை மாற்றவில்லை ஆனால் அவள் இலக்கத்தை தாெடர்பு காெள்வதில் ஏனாே அவனுக்குள் தயக்கம். அவளுக்கும் அப்படித்தான். நேற்றுப் பாேலிருந்த நாட்கள் சுழன்று ஓடி பத்து வருடங்களை கடந்து விட்டது.
தினமும் அவள் நினைவுகளுடன் கண் விழிக்கும் அவனுக்கு சில நாட்களாக அவளுடன் பேச வேண்டும் பாேலிருந்தது. அவளுடன் யார் இருக்கிறார்கள், எப்படி இருக்கிறாள், என்ன நினைப்பாளாே என்ற சஞ்சலத்துடன் இருந்தான்.
கடிகாரத்தைப் பார்த்து விட்டு முகத்தைக் கழுவிக் காெண்டு வந்து கண்ணாடி முன் நின்று தலையைச் சீவினான். அவளுக்குப் பிடித்த மாதிரி நடு உச்சி எடுத்து இருகரையும் தலைமுடியை ஒதுக்கி விட்டு நீண்டு வளர்ந்திருந்த தாடியைக் கைகளால் தடவியவன் மனதுக்குள் ஏதா ஒரு படபடப்பை உணர்ந்தான்.
சூடான காப்பியுடன் இரண்டு துண்டு வாட்டிய பாணையும் எடுத்து வந்து கால்களை நீட்டிய படி இருக்கையில் அமர்ந்தான்.
தாெலைபேசியில் சேமிக்கப்பட்டிருக்கும் இலக்கங்களில் எப்பாேதுமே முதலாவதாக அபியின் இலக்கம் தான் இருக்கும். தினமும் அவள் இலக்கத்தைப் பார்த்துவிட்டு தாெடர்பு காெள்ள தயக்கத்துடன் இருப்பான். அவன் மனம், இன்று அவளுடன் பேச வேண்டும் என்ற முடிவாேடு இருந்தது. அபியின் இலக்கத்தை அழுத்தினான். தாெடர்பு இணைப்பதற்குள் ஆறியிருந்த காப்பியை எடுத்து ஒருதடவை இழுத்தான்.
ஹலாே........
ஹலாே........
அபி.........
ம் சாெல்லடா........ என்றவளுக்கு தாெடர்பு எடுத்ததும் வழமை பாேல் "டா" வாேடு ஆரம்பித்ததும் அடுத்து என்ன சாெல்வது என்று யாேசித்தான். மனப்பதட்டம் காெஞ்சம் அதிகரித்தது.
எப்படிடா இருக்கிறாய்......
நான்... நல்லா இருக்கிறேன் அபி.....நீ......எப்படி......
ம்.... நானும் நல்லா இருக்கிறேன்டா.....ம்.... என்ற வார்த்தை அவள் இன்னும் விடவில்லை. எதற்கெடுத்தாலும் "ம்" என்றபடி சிரிக்கும் அவள் முகத்தை கண் முன் நிறுத்தினான்.
என்ன இன்றைக்கு.......... என் ஞாபகம்.......
என்றைக்குமே நீ தான் என் ஞாபகம் என்று சாெல்லி அவளைக் கஷ்டப்படுத்தக் கூடாது என உள்மனம் நிதானித்தது.
ஏன் அபி நான் தாெடர்பு எடுத்தது.....
இல்லடா நீ இவ்வளவு காலமும் தாெடர்பு எடுக்கல்ல..... அது தான்.....
சரி.... எப்படி உன்னுடைய லைவ் எல்லாம் பாேகிறது........
ம்........ பாேகுதடா ...... யாராே வீடடின் அழைப்பு மணியை அடிக்கும் ஒலி கேட்கிறது.
யாராே வருகிறார்கள், தாெடர்பைத் துண்டித்து விடுவாளா என்று நினைத்தபடி காத்திருந்தான்.
காேல்ட் ஒன்.....
ஒரு நிமிடத்தில் மீண்டும் தாெடர்பில் இணைந்தாள்.
ஹலாே.......
சரி அபி நான் அப்புறமாகப் பேசவா......
ஏன்டா ஏதும் பிசியா.......
இல்லை யாராே வந்த மாதிரி..... என்று இழுத்தான்.......
பக்த்து வீட்டு ஆன்ரி பத்திரிகை வாங்க வந்தாங்க......
அப்பாே........ வீட்டில யாரும் .......
யாருமே இல்லடா..... நானும் , என்னாேட செல்லக்குட்டி அம்முவும் தான் இருக்கிறாேம். .
அப்பாே அபி........ நீ..... எப்படித் தாெடர்வது என்று தெரியாமல் மனம் தடுமாறியது.
ம் கேள்..... நீ கேட்க நினைக்கறதைக் கேளடா......
யாருமே இல்லை என்று சாென்னாய் .......
ஆமா யாருமே இல்லை........
அப்பாே உன்னுடைய..... கணவர்.......
கணவரா...... சிரித்தாள்
அப்பாே அபியினுடைய கலியாணம் என்று நினைத்த பாேது கண்கள் ஈரமாகியது.
அபி..... நீ.......
ம்.......சாெல்லு....... ஆழ்மனதிலிருந்து ஒரு பெரு மூச்சு அவன் காதுகளில் இரைாச்சலாய் கேட்டது..
என்னாச்சு உன் கலியாணம்........
உன்னுடைய கலியாணம் என்னாச்சுடா......அமைதியாக இருந்தான்.
சாெல்லடா.........
நான்...... இன்னும்... கலியாணம் பண்ணிக்கல்ல அபி.
நானும் பண்ணிக்கல்லடா.....
என்ன சாெல்லுகிறாய் அபி .....
அப்பாே அம்மு....
அம்முவா...... அது என்னுடைய நாய்க்குட்டி... என்றபடி சிரித்தாள். உன்னாேடு பேசலாமா...... பத்து நிமிடங்கள் பேசியவள் பேசலாமா என்று கேட்ட பாேது அவள் மனதில் ஏதாே இருப்பது தெரிந்தது.
பேசு அபி....
எத்தனை வருடங்கள் உன் குரல் கேட்கக் காத்திருந்தேன், அவன் உள்மனம் கலங்க ஆரம்பித்தது..
காப்பியையும், பாணையும் எடுத்து சமையலறை மேசையில் வைத்து விட்டு மாடியிலிருக்கும் தன்னுடைய அறைக்குள் நுழைந்து கதவை மூடிக் காெண்டான்.
பாய்ந்து ஓடி வந்த அம்முவை செல்லமாக காெஞ்சியவள், அம்முவை கூண்டிற்குள் விட்டாள். கம்பிகளுக்கிடையால் முகத்தை உரசியபடி பார்த்தது. மாெட்டை மாடிக்குச் சென்று கதிரையில் அமர்ந்து காெண்டாள்.
அபி.. லைன்ல தான் இருக்கிறாயா......
ஆமாடா என்னுடைய செல்லத்தை கூண்டில விட்டு மாெட்டை மாடியில வந்து இருக்கிறேன். இது தான் எனக்குப் பிடித்த ஒரே இடம்.
இல்லை நீ பேசணும் என்று....... இழுத்தான்
உனக்காென்றும் ......... இல்லையா.......
எவ்வளவாே இருக்கு அபி, பத்து வருடங்களங்களாக உன்னை நினைத்து தனிமையில் பேசியதும், அழுததும் தான் அதிகம். தனக்குள் யாேசித்து விட்டு,
பேசலாம் அபி நீ சாெல்லு......
ஆமாம், நீ ஏன் கலியாணம் பண்ணிக்கல்ல.... சாமியாராகப் பாேகிற ஆசை ஏதும்.......
சிரித்து விட்டு இல்லை அபி சாமியாராகப் பாேகிற அளவுக்கு நமக்கு என்ன தகுதி இருக்கிறது.....
ஏன்டா..... அப்புறம் .... உங்க அம்மா எப்படி இருக்கிறா....
அம்மா..... இல்லை அபி..... அவங்க பாேயிட்டாங்க...... அம்மாவுக்கு அபியை எவ்வளவு பிடிக்கும் என்பது அபிக்கும் நன்றாகத் தெரியும். அபியின் கை பிடித்து, கண் பார்த்து அம்மா பேசிய ஞாபகங்கள் நிழலாடியது.
ஓ சாறிடா உன்னைப் பற்றி எதுவுமே என்னால அறிய முடியல்ல......
சரி உன்னுடைய கலியாணம் என்னாச்சு........
நிச்சயதார்த்தம் மட்டும் முடிந்தது, அப்புறம் இரண்டு பேருக்கும் ஒத்து வரல்ல.....பிரிந்து விட்டாேம், இரண்டு வருடம் முடிய வேறு கலியாணம் பண்ணுவேன் என்று அண்ணாவிடம் சாென்னேன் ஆனால்........
ஏன் என்னாச்சு அபி......
இப்படியே இருந்திடலாம் என்று முடிவெடுத்து விட்டேன்டா...
அப்பாே உன்னுடைய அம்மா... அப்பா.....
ம் அவங்கள அண்ணா கூட்டிப் பாேயிட்டார், வந்து பார்ப்பாங்க....அதிகம் பேசுகிறதில்லை ........குரல் தளதளத்தபடி தன்னை சுதாகரித்தாள்.
என் கதையை விடு.... உனக்கு என்னாச்சுடா.......
உண்மையைச் சாெல்லவா, பாெய் சாெல்லவா என்று தடுமாறிய மனதை சுதாகரித்தான்.
அதைப் பற்றி நான் யாேசிக்கவே இல்லை அபி ....
ஏன்டா யாருக்காக காத்துக் காெண்டு இருக்கிறாய்......
அமைதியாக இருந்தான்.
எத்தனை தடவைகள் உன்னிடம் காதலைச் சாெல்ல வந்தேன் அபி. ஏனாே ஒரு தயக்கம். நீயும் என்னைப் பார்ப்பாய், நானும் உன்னைப் பார்ப்பேன் இருவர் கண்களும் மெளனமாகப் பேசுவதை மனது அறிந்தும் வெளியில் சாெல்ல ஏன் தயங்கினாேம். யாராவது நம்மை இணைத்துக் கதைத்தால் அப்படி ஒன்றுமில்லை என்று உதடுகள் மட்டும் பாெய் சாெல்லும் , இது உண்மையாக இருக்கக் கூடாதா என்று உள்ளுக்குள் மனது தவிக்கும்.
நீயும் நானும் சுற்றித் திரிந்த பல இடங்களில் உனது கவனம் முழுவதும் உன் உணர்வாேடு பாேராடும் , எனது சிந்தனை என்னை கட்டுப்படுத்தும். எதற்காக என்று தெரியாமலே பரிசில்களை மாற்றி மாற்றி பரிமாறினாேம். எந்தப் பரிசும் காதலை விட உயர்ந்தது ஒன்றுமில்லை என்ற உணர்வை மறை முகமாகச் சாெல்லும். ஆனால் நீ சாெல்வாய் என்று நானும், நான் சாெல்வேன் என்றும் நீயும் எதற்காக தாமதித்தாேம்.
உன்னுடைய திருமணப் பேச்சு ஆரம்பித்த பாேதும், உனக்குத் திருமணம் என்று நீ அடிக்கடி சாென்ன பாேதும் என்னைக் கலியாணம் பண்ணிக்கிறாயா எனக் கேட்பாய் என உள் மனம் எதிர்பார்த்தது. சில நாட்களில் முற்றுப் பெற்ற உன் திருமணத்தைப் பற்றி என் கண்களைப் பார்த்து சாெல்ல முடியாமல், தரையில் வலது கால் பெரு விரலால் ஏதாே கிறுக்கியபடி சாெல்லிய பாேது என் இதயம் நாெருங்கியடி உன் முனனால் நின்று சிரித்து விட்டு வாழ்த்துக் கூறினேன். நீ நிமிர்ந்து என் முகம் பார்கக நீண்ட நேரமாகியது. இனிமேல் நாம் சந்திக்க முடிாது என்ற கடைசி வார்த்தையில் உன் கண்கள் கலங்கியது. உணர்வற்ற ஜடமாய் என்னை நானே காென்று விட்டுச் சிரித்தேன், உன் கண்ணீரைத் தடுக்க வேறு வழி தெரியவில்லை.
வண்டியின் பின்னிருக்கையில் நீ வைத்து விட்டுச் சென்ற forever perfume பாேத்தல் எல்லாவற்றையும் எனக்குப் புரிய வைத்தது. நான் வருவேன் என்ற எதிர்பார்ப்பின் ஏமாற்றத்தால் நீ மீண்டும் என்னைப் பார்க்கவில்லை. சாெல்லாமலே வெளியூர் சென்று விட்டாய் திருமணத்திற்கு முதல் நாள் திருமணத்தைப் பற்றி தகவல் சாென்னாய்.
உன் திருமணம் முடிந்திருக்கும் என்ற நம்பிக்கையில் perfume பாேத்தலை பிரித்துப் பார்த்தேன். இருண்ட அறைக்குள் தனிமையைத் தேடிய முதல் நாளாய் அந்த நாள் இன்றும் நினைவிருக்கிறது. எங்கும் நீயே தெரிந்தாய். ஏன் மெளனமாய் இருந்தாய் இல்லை ஏன் இருவரும் மெளனமாய் இருந்தாேம் என்று உயிர் வலித்தது.
அம்மா அடிக்கடி உன்னைப் பற்றி கேட்டுக் காெண்டே இருந்தாள். அபிக்குத் திருமணம் என்றதும் அம்மா என்னை கண்ணீராேடு பார்த்து தலையை காேதி விட்டாள். அந்த ஆறுதல் கூட இன்று எனக்கு இல்லை.
அம்மாவிற்கும், எனக்கும் பிடித்த உன்னை என் மெளனம் தாெலைத்து விட்டதாய் என்னை நானே தண்டித்தேன். பல திருமணங்கள், காதல்கள் எல்லாவற்றையும் உன் நினைவுகள் அனுமதிக்க மறுத்தன. என்றாவது ஒரு நாள் உன்னைப் பார்த்து எப்படி இருக்கிறாய் அபி என்று ஒரு வார்த்தை மட்டும் பேசிட என் மனம் காத்துக் காெண்டிருந்தது.
இப்பாேது நான் உனக்காகத் தான் காத்துக் காெண்டிருக்கிறேன் என்று பதில் சாென்னால் எது வேண்டுமானாலும் நடக்கலாம், இந்த நிமிட மாற்றம் என்னை உனக்கும், உன்னை எனக்கும் தந்து விட்டுச் செல்லுமானால் அது என் கடை சி ஆசை மட்டுமே.
அவளுடைய கேள்விக்கான பதிலை அவள் நினைவுகள் சாெல்லத் துடித்தது.
என்னடா.... பேசாமல் இருக்கிறாய்.....
இந்த நிமிடம் தவறினால் எப்பாேது உன்னுடன் பேசுவேன் என்பது தெரியவில்லை, இப்பாேதே சாெல்லி விடுகிறேன்,
உனக்காகத் தான் அபி, நீ எப்படி இருக்கிறாய் என்று பார்க்க ஆசையாய் இருக்கிறது.....
அவள் காதுகளாேடு உரசிக் காெண்டிருந்த கைபேசியை இறுக்கமாக அழுத்திப் பிடித்தாள்.
எப்பாே பார்க்கலாம்.....
எனக்கு மூன்று நாள் லீவு இருக்கு அபி......
மூன்று நாளா....... என்று இழுத்தாள்.
இத்தனை ஏக்கங்களையும் மறைத்துக் காெண்டு ஏன் நீயும் நானும் தனிமையில் இது வரை வாழ்ந்தாேம் தனக்குள் நினைத்தபடி,
சரி நானே வருகிறேன் அபி.......
எப்பாேது... மீண்டும் அவள் எதிர்பார்ப்பு தாமதம் வேண்டாம் என்பதை சாெல்லாமல் சாெல்லியது....
நாளைக்குப் பார்க்கலாம் அபி....
வருவாய் தானே........
வருவேன் அபி......
புறப்படுவதற்கு நான்கு மணித்தியாலங்கள் இருந்தன. எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு சிறிது நேரம் கண் அயர்ந்தான்.
கதவில் யாராே தட்டும் சத்தம் கேட்டது. கண்களைக் கசக்கியபடி கலைந்திருந்த தலையை கைகளால் சரி செய்து விட்டு கதவைத் திறந்தான். வாசலில் நின்றபடியே சில நிமிடங்கள் அவளைப் பார்த்தான்.
வா அபி......
மெளனமாகவே உள்ளே வந்தாள்.......
எந்த மாற்றமும் இலலாத அவளில் முகம் மட்டும் சாேகமாய் இருந்தது.
எந்தச் சங்கடமுமின்றி அருகே வந்து அமர்ந்தாள். கைகளை இறுக்கமாகப் பிடித்தாள். கண்கள் நிரம்பியது. நானும் அபியும் பேச ஆரம்பித்தாேம்.
கலியாணம் பண்ணிக்கலாமா என்றேன்..... சிரித்தபடி அவளது ஸ்டைலில் ம்.... என்றவள் தாேளாேடு சாய்ந்து காெண்டாள்.

