சாவான் - குறுங்கதை
ஏன்டா வடநாட்டிலிருந்திருக்கி
கடைசிப் பேரா, உம் பையன் பேரு
என்னடா?
@@##
அவன் பேரு சாவன் (Saavan)
@@@@@@
என்னது 'சாவான்'னா? ஏன்டா நீ பெத்த பிள்ளைக்கு 'சாவான்'னா பேரு வைக்கிறது? என்னடா அநியாயம்? இந்திப் பேரைப் பிள்ளைங்களுக்கு வைக்கிறதிலயும் ஒரு ஒழுக்கம் வேண்டாமா? சொல்லக்கூடாததை எல்லாம் பேரா வச்சுருக்கிறதா?
@@@@@@@
சாவான் இல்லங்க பாட்டிம்மா
சாவன்.
@@@@@
அந்த எழவு சாவுங்கிற வார்த்தையே
பேருள வரக்கூடாதடா. வடக்க
போனா எல்லாம் தலைகீழா
மாறிடுமா? நீ தனராசுன்னு இருந்த
உம் பேரைத் தன்ராசு (தன்ராஜ்)-ன்னு மாத்திட்ட. உன்னோட மனைவி பேரு முத்தம்மா..அதை 'மோத்தி'னு (Moti) மாத்திட்ட. போர்வையை எடுத்து மோத்திக்குப் போத்திவிடுடா..இதெல்லாம் என்னடா பேரா?
@@@@@@
என்னக் கொறை சொல்லாதீங்க.
இங்கேயே இருக்கிற உங்க
நடுபேரன் அவன் பையனுக்கு
'நீவிஷ்'ன்னும் பொண்ணுக்கு
'பூவிஷா'-ன்னும் பேரு வச்சிருக்கான்.
இந்தில அந்த மாதிரி பேருங்களே
கெடையாதுங்க பாட்டிம்மா.
@@@@@@@
கொழுப்பு ஏறின அவுனும்
'நடராசன்' -ங்கிற அவம் பேரை
'நட்டுராசு' (நட்ராஜ்)-ன்னு
மாத்திட்டான். தாய் தந்தையை மதிக்காம கண்டபடி கட்டிப்பிடிச்சு ஆட்டம் போடற ஆம்பளங்க பொம்பளங்க படத்தை வெறித்தனமா பாக்கற உந் தலைமுறைக்கு நல்ல புத்தியே
இருக்காதுடா கடைசிப் பேரா. சரி. சரி. நல்லா இருந்தா சரி
@@@@##
@@@@@@@@@@@@@@@@@@@@@■■■■■■■■■■■■■■◆◆◆◆◆◆◆◆
Saavan = ஸ்ப்ரிங்
Moti = Pearl

