நாவினால்
நா ஓர் எழுத்து .ஆனால் அதற்குரிய பொருளோ உலகத்தையே மாற்றி விடும் ஆயுதம் .நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு என்றார் வள்ளுவர்.
நா நன்மை செய்ய பயன்படும் .
தீமை செய்ய பயன்படும்.
ஒன்றாக வாழும் குடும்பத்தை பிரிக்க லாம் .பிரிந்த குடும்பத்தை சேர்க்கலாம் .நரம்பில்லாத நாக்கு என்றே பெயர் பெற்றது. எப்படி வேண்டுமானாலும் சூழலும் .
பல ஆயிரம் ருசி நரம்புகளை கொண்டது. ருசிக்கும் பசிக்கும் தொடர்புண்டு.
பசி ருசி அறியாது என்பார்கள்.
பசி இருந்தால் நாக்கு நரம்புகள் ருசியின் தன்மையை மூளைக்கு கொண்டு போக நேரம் இருக்காது. ஒவ்வொருஉமிழ் நீரின் உத்தம குணத்தால் உணவைச் செரித்து உடலுக்கு உடனே அனுப்பும்
.பசி இல்லையேல் பல வழிகளை பட்டியலிட்டு பாவம் உன்னை மெதுவாய் சுவைக்கும் .வெறும் ருசிக்காக தான் நாக்கா?
இவனுக்கு நாக்கு நீளம் சார்.
இவன் நாக்கு நரம்பில்லாத து.
அது எப்படி வேண்டுமானாலும் பேசும் .இப்படியெல்லாம் கேள்வி பட்டு இருக்கிறோம் .
இந்த நாக்கை வைத்துகொண்டு எந்த இடத்தில் என்ன பேச வேண்டும் என்னபேசக்கூடாது என்று ஆத்திச்சூடி அவ்வை பாட்டி 16 இடங்களில் சொல்லுகிறாள்.
எல்லோருக்கும் நா இருக்கிறது .
வலிமையாக வலிமை அற்றதாக .
நாவன்மையால் சாதித்தவர்கள் உண்டு .நாவன்மையால் அழிந்தவர்களும் உண்டு .
யோசித்துப்பாருங்கள் .
இந்த நாவால் எத்தனை பேரை வாழ்த்தி வரவேற்றே இருக்கிறோம் .
இந்த நாவால் எத்தனை குடும்பங்களை சேர்த்து வைத்திருக்கிறோம் .
படித்த படிப்புக்கு தகுந்தார் போல நாநடிக்கவில்லையா?
உலகம் என்ற நாடக மேடையில் நடிக்க வந்தவர்கள் தானே நாம் .
அவன் ஆட்டுவிக்கிறான் நாம் ஆடுகிறோம்.
ஆனால் அவனிடம் நாம் எதை கேட்கிறோம்.
நான் படும் பாடு சிவனே உலகம் நவிலும் பஞ்சு .
தான் படுமோ சொல்லத்தான் படுமோ என்னதான் படுமோ
கான்படும் கனீனியின் மான்படுமாறு கலங்கி நின்றேன் .
ஏன் படுகின்றனைஎன்று இரங்காய் என்னில் என் செய்வேன்? என்று இந்த மனமும் நாவும் ஏங்கியதுண்டா?
இல்லையே.
மற்றவர்களை நமது நா எப்படி எல்லாம் ஆட்டுவிக்கிறது.
நமது செயல்கள் அனைத்துமே இறைவன் கைகளில் .இதைத்தான் கவிஞர் கண்ணதாசனும் ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ கண்ணா என்றார்.
இந்த நாவினால் மற்றவர்களை அழிக்க முடியும் .
நா பாடுவதும் பொருள் தேடுவதும் பாவலர்களின் தொழில். நாடுவது இறைவனை என்றால் நா செய்யும் போது நாம சங்கீர்த்தனம் ஆக இருக்க வேண்டும் என அறிந்து கொள்வோம் .இறைவன் நாமத்தை சொல்லும்போது கூட தைரியமாக மனதில் பயமாக பக்தியாக சொன்னால் நாஇங்கு நலம் பயப்பதாக இருக்கும் .
ராவணனும் கும்பகர்ணனும் கடுந்தவம் புரிந்தனர் .
கும்பகர்ணனின் கடும் தவத்தை மெச்சிய பிரம்மன் தோன்றினார் கும்பகர்ணா உன் தவத்தை மெச்சினேன் உனக்கு என்ன வேண்டும் கேள் .என்றான் .பிரம்மன்
ஒரே வார்த்தையில் ஒப்பற்ற வரம் பெற நினைத்தான்கும்பகர்ணன் .நித்தியத்துவம் வேண்டும் என்று நினைத்தான்.மனம் அறிவு உணர்வு மூன்றும் ஒன்று சேர்ந்து நித்தியத்துவம் என நினைத்து.
இவன் என்ன கேட்கப் போகிறான் என உணர்ந்து கொண்ட பிரம்மன் அப்படிக் கேட்டு கொடுத்து விட்டால் பிறகு அந்த பலனை அனைவரும் அனுபவிக்க வேண்டி வரும் என்பதால் சரஸ்வதி மை நினைக்க சரஸ்வதி கும்பகர்ணனின் நாவில் நடனமாடினார் .நா
அசைய அதிலிருந்து வெளிவந்த சொல் நித்திரத்துவம் வேண்டும் என்றான்.உடனே தூக்கம் வர ஆரம்பித்தது .
சில நொடிகளில் பொது அறிவு உணர்த்தியது எல்லாம் நித்தியத்துவம் ஆனால் நாசேர்ந்து ஒலியாக வெளியேவெளியே வந்ததுநித்திரத்துவம்.
இந்த சம்பவம் நமக்கு என்ன சொல்கிறது .
பல சமயங்களில் பல சம்பவங்களைவரமாகபெற இருக்தகிறாய்.
இறைவனை பணிந்து ஆணவம் அழித்து நடந்தால் நீ கேட்பது கிடைக்கும்.
நா நமக்கு நன்மை மே பயக்கும்.