துகளதிகாரம்

"ஆகா அழகான கவிதை"யென்கிற எண்ணவோட்டம்

இப்படியும் எழுதலாமே என மடைமாறும் போது

கருத்தரிக்கிறது புதுக்கவிதை!

*************************************************************************

பசித்து வயிறு காய்ந்தவனின் பக்கத்துவீட்டில்,

மிஞ்சியது காய்ந்து கொண்டிருந்தது வத்தலாக!

*************************************************************************

தலையில் பூ வைத்துப்

பூ விற்கும் பூக்காரிகளை,

பூ வாங்கும்போதெல்லாம்

பார்த்ததாக நினைவில்லை!

*************************************************************************

ஒருவகையில் மழையின் ஒவ்வொரு துளியும் விந்துக்களே!

பூமியில் விழும்போதெல்லாம் பல கவிதைகள் கருவுருகிறது!

*************************************************************************

நிலவொளியில் யோசித்தேன்!

நிலவில்லா நாளில்

நிலவில்,

நிலவினொளி எப்படியிருக்கும்?

*************************************************************************

ஒட்டிய வயிறும்,
தட்டுமாய் உணவகத்தில் நின்ற கைப்பிள்ளைக்காரி

வசைகளைக் கேட்டு
அடுத்த கடைக்கு நடந்தாள்

வாசனையைப் பெருமூச்சில் நிறைத்துக்கொண்டே!

***********
இருந்தாலும்,இல்லாவிட்டாலும்

பார்க்கும்போதெல்லாம் அவரும் எனைப் பார்க்கிற உணர்வு

அப்பாவின் பழைய மூக்குக்கண்ணாடி!

***********

சுகவாசிகளே!குப்பையில் போடுங்கள்

புதர்களில் தோரணமாக்காதீர்கள்

சீமைக்கருவைகளை ஆணுறைகள் ஒருபோதும் கட்டுப்படுத்துவதில்லை!

***********

ஆளில்லா சாலையை

கேட் இல்லாமல் குறுக்கும்,நெடுக்குமாய்க் கடக்கின்றன ரயில் பூச்சிகள்!

***********

எப்போதும் முறைத்துக்கொண்டே திரியும் எதிர் வீட்டுக்காரியிடமிருந்து,
எப்போதாவது கிடைக்கும்

வினோத வாசனைத் தூறல் வரவேற்பு

கிழிந்ததுண்டில் தலை உதரும் போது!

எழுதியவர் : ஜெகன்.த (15-Jun-20, 2:29 pm)
சேர்த்தது : Jegan
பார்வை : 91

மேலே