போதைக்கு
அயல் நாட்டான் வந்து நுழைந்தான்
அரிய செல்வம் களவு போச்சு
இந்நாட்டான் பிரிந்து கிடந்தான்
எல்லா உரிமையையும் இற்று போச்சு
போதைக்கு அடிமையானன்
பொன் பொருள் எல்லாம் போகலாச்சு
சுதந்திரம் பெற்ற போதே
சுய தொழிலெல்லாம் அழியலாச்சு
சட்டத்தை எழுதிய போதே
தவறுகளுக்கு விதை ஊன்றலாச்சு
நீதிமன்ற படி நிலையால்
தண்டனையின் வீரியம் நீர்த்துப் போச்சு
அரசியல் அரசு என்ற முறையால்
அனைத்து நிலையிலும் ஊழலாச்சு
காசு என்ற கானல் நீரால்
கணக்கற்றத் துன்பம் பெருகலாச்சு.
---- நன்னாடன்.