நகைச்சுவை துணுக்குகள்

இவர் அக்கௌண்டண்ட் ஜெனரல் ஆபீஸுலே சேர்ந்தாலும் சேர்ந்தார் இவரோட உபத்திரவம் தாங்க முடியலை.
ஏன்? அப்படி என்ன தொந்திரவு பண்றார்?
நான் எனக்கு சேலை வாங்கணும்னாகூட வெவ்வேறே கடைகளிலிருந்து குறைஞ்ச பட்சம் மூணு கொட்டேஷன் வாங்கி குறைஞ்ச விலை யார் கோட் பண்ணியிருக்காங்களோ அவங்க கடையிலிருந்து தான் சேலை வாங்கணும்னு கட்டாயப்படுத்தறார்.
**********
அவனைத் திட்டாதீங்க.
அவன் செஞ்ச காரியத்துக்கு அவனைத் திட்டாம அவனைக் கொஞ்சச் சொல்றியா?
அதெல்லாம் இல்லீங்க. இந்தக் காலத்துப் பசங்க முணுக்குன்னா தற்கொலை பண்ணிக்கிற அளவுக்குப் போயிடறாங்க. அதுக்குத்தான் சொல்றேன்.
*****************
வக்கீல் ஐயா, நான் செய்யாத தப்புக்கு மூணு வருஷம் ஜெயில்லே இருந்துட்டேன். இப்ப உங்க உதவியாலே உண்மை தெரிஞ்சு என்னை விடுதலை பண்ணிட்டாங்க. ஏங்க? எந்த மாதிரி தப்புகளுக்கு மூணு வருஷம் தண்டனை கிடைக்கும்?
எதுக்குக் கேட்கிறே?
அனுபவிச்ச தண்டனையை நியாயப் படுத்த அதுக்கேத்த மாதிரியான தப்பைப் பண்ணினாத்தான் என் மனசு சமாதானமடையும். அதுக்குத்தான் கேட்கிறேன்.
*****************
அவர் ஏன் ஒலிம்பிக்ஸ் பந்தயத்துலே தடத்துலே கீழே விழுந்து தூங்க ஆரம்பிச்சுட்டார்?
அவர் ஊக்க மருந்து சாப்பிடறதுக்குப் பதிலா தூக்க மருந்து சாப்பிட்டுட்டாராம்.
************

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (16-Jun-20, 3:04 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 91

மேலே