புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 2---

புத்தன் வீட்டுப் பூக்கள் - 2

11. உன்னைப் பெற்றதே கடவுள் தான்
உள்ளத்தில் அன்பிருந்தால் உணர்ந்து கொள்வாய்.

12. நீ மற்றவர்களைப் பார்த்து மாற நினைக்கும் போதே
உன்னை இழக்கத் தொடங்குகிறாய்.

13. விதைக்காமல் எதுவும் விளைவதே இல்லை
நிலத்தினில் மட்டுமல்ல உயிரினத்திலும் தான்.

14. தேவைக்கு அதிகம் சேர்த்த பணத்தால் நிம்மதி வருவதே இல்லை.

15. இறந்த காலத்தையே நினைத்துக் கொண்டிருந்தால்
உன் எதிர்காலம் கைநழுவிப் போகும்.

16. உனக்கு உரிமை இல்லாத பொருளுக்கு ஆசைப்பட்டால் துன்பமே நேரும்.

17. அரசியல் என்ற நூலால் ஆட்டி வைக்கப்படும் பொம்மையாய் மக்கள்
நூல் கை மாறினாலும் பொம்மைக்கு விடுதலையே இல்லை.

18. ஆசைகள் குறையும் போதே முளைக்கின்றது வாழ்க்கையில் அமைதி.

19. தூங்குவது போல் நடிப்பவர்கள் நல்லதையும் கெட்டதையும்
உள்வாங்கிக் கொண்டே இருப்பார்கள்
நேரம் வரும் போது எதிர்வினை ஆற்றுவார்கள்.

20. உண்மையும் பொய்யும் ஒரே இடத்தில் தான் இருக்கிறது
இருளும் ஒளியும் அதற்கான சாட்சி.


...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (20-Jun-20, 8:06 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 121

மேலே