இப்படியும் காதல்
இன்னும்கொஞ்ச நேரம் கொஞ்சி பேசிடலாமே
எந்தன் கண்ணே கண்ணம்மா நீயோ
அங்கே நானோ இங்கே நாம் இப்படி
கொஞ்சு பேசுவது இரு கைபேசி மூலமேதானே
இதில் தொட்டு உறவாடுதல் ஏதுமில்லையே
நாளை என் வதுவே உனக்கேன் இதில்
நாட்டமில்லையே சொல்வாயா என்றேன் அதற்கவள்
இப்படி பேசிக்கொண்டே எத்தனை நாள் .....
என்றாள்...... கொரோனா ஓடிஒளிந்திடும் வரை என்றேன்
அதற்கவள் அதுவரைப் பொறுத்திரு மன்னவ
இந்த கைப்பேசி பேச்சு போதும் போதும் அதுவரை
அது இன்பமான துன்பமானதென்றாள்