அன்பன்

அம்மாவை உறவாய் தந்தவன்
அன்பை மொழியாய் செய்தவன்
அறிவை அறிமுகம் செய்தவன்
ஆக்கமெனும் பொருள் தந்தவன்
இரக்கத்தை செயலில் சொன்னவன்
ஈகையை பொருளாய் செய்தவன்
உறவுகள் சொல்லி தந்தவன்
உழைப்புக்கு முகவரி தந்தவன்
ஊக்கத்தை முதலாய் கொண்டவன்
எக்காலமும் நட்பு சொல்பவன்
ஏக்கம் எனும் சொல் துறந்தவன்
ஐவரின் உலகில் அன்பு சமைத்தவன்
ஒற்றுமையின் பொருள் தெரிந்தவன்
ஓய்வுக்கு ஓய்வு தந்தவன்
அன்பன் அவன் - உலகுக்கு
இறைவன் தந்த பெயர் தந்தை.

எழுதியவர் : சம்யுக்தா ( நரேனி தாசன் ) (22-Jun-20, 8:39 pm)
சேர்த்தது : Samyuktha
Tanglish : anben
பார்வை : 591

சிறந்த கவிதைகள்

மேலே