மல்லிப்பூ
அழகான மல்லிப்பூ வாசம்
நிறைந்த வெள்ளைப்பூ வண்டுகள்
நாடி வரும் தேன்பூ -ஆனால்
பாவம் மல்லிப்பூ தன்னழகைப்
பாராத அற்புதப் பூ
பார்க்க கண்ணில்லை பூவிற்கு
தன் வாசம் அறியாப்பூ மல்லிப்பூ
பூவிற்கு ஏது நாசி
கசங்காது வாடாத வரை
பெண்கள் விரும்பும் பூ
வாடிவிட்டாலோ தரையில் வீசப்பட்ட
வாடிய நேற்றையப்பூ
வாசம் உள்ளவரை பூவை
நாடியோடும் வண்டு வாசம்
போனபின் வாடியப்பூவே
தேனுள்ளவரைதான் பூவுக்கும் மவுசு
தேனில்லை எனில் சுண்டிய
வாடிய பூ மல்லிப்பூ
அழகும் தந்து நறுமணமும் தந்து
இதழ்களில் தேனும் தந்து
இவை எதையும் அறியா
மல்லிப்பூவே ...... இப்படி உன்னைப்படைத்த
இயற்கைக்கு உன் மீது ஏன் இந்த சீற்றம்