வானவீதியில் காதலிப்போம்

அற்புதம் என்ற நிலை நமக்கு _இது
ஆதிமூலம் போட்டுவைத்த கணக்கு.
இதிகாசம் கூறுகின்ற சரக்கு _இங்கு
ஈன்றதய்யா புதுயுக பிறப்பு .

அந்தி காலம் வருவதற்குள் பறப்போம் _நாம்
மேல் உலகம் கீழ் உலகம் ரசிப்போம்.
சொந்தமாக பிளாட் வாங்க துடிப்போம் _இனி
எந்த எந்த கிரகம் எனக் கதைப்போம்.

வானத்து வீதிகளில் பிறப்பு_ இனி
வந்து விடும் இது ஒரு கணிப்பு.
இந்திரனின் வீட்டுப்பக்கம் நமக்கு_ ஒரு
சொந்தமான வீடு ஒன்று இருக்கும்.

வெந்த அரிசி பருப்பு இனி இல்லை _நமக்கு
விட்டமின் மாத்திரை தான் தொல்லை.
கந்தக பூமியும் அங்கில்லை _காதல்
செய்வதற்கும் தொல்லை ஏதும் இல்லை.

எழுதியவர் : சு.இராமஜோதி (24-Jun-20, 11:53 am)
சேர்த்தது : ராமஜோதி சு
பார்வை : 308

மேலே