சில் எனும் உணர்வை
உதய காலத்தில்
ஒவ்வொரு நாளும்
பவுர்ணமி நிலவுக்கு
ஏங்கி தவிக்கிறேன்.
உன் நிலவு முகத்தை
மேக ஜன்னலில்
மறைத்து விடுவதால்
தினம் தினம்
நீயே
தேய்பிறை ஆகிறாய்!
தேய்பிறை
தேய்பிறை யாகவே
இருப்பதில்லை.
ஒரு நாள்
பௌர்ணமியாய் ஒளிவீசும்.
அப்போது என் இதய
பாலைவனத்தில்
உன் குளுமையான
கரங்களால்
என்னை
தடவி விட்டு போ!
பாலைவனமாவது
ஒரு
சிறு பனித்துளியின்
சில் எனும் உணர்வை
அனுபவிக்கட்டும்.