சீட்டுக்கட்டும் தேர்தலும்

===
இரண்டிலும் சீட்டுகள் பிரதானம்
**
இரண்டிலும் கள்ளச் சீட்டுகள்
நிச்சயம் இருக்கின்றன
**
சீட்டுக்கட்டில்
சீட்டுகள் கலைக்கப்பட்டதும்
ஆரம்பமாகி விடுகிறது
விளையாட்டு
**
தேர்தலில்
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதும்
ஆரம்பமாகத் தொடங்குகிறது
தேர்தல் விளையாட்டு
**
அங்கே நாலைந்து பேர் கூடி
சொந்தப் பணத்தை வைத்து
விளையாடுகின்றனர்
*
இங்கே ஆயிரக் கணக்கானோர் கூடி
ஊரார் பணத்தை
விளையாடுகின்றனர்
**
இரண்டிலும்
விளையாடி செயித்தவர்களே
எப்போதும் தீராத போதையில்
**
துருப்புச்சீட்டு இல்லாதவன்
இருப்பைத் தொலைத்துக்
குடும்பத்தைக் குட்டிச்சுவராக்கவும்
வாக்குச் சீட்டை விற்றவன்
வாழ்வைத் தொலைத்து
நாட்டைக் குட்டிச்சுவராக்குவதாலும்
இரண்டிலும் துன்பங்களே..
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (24-Jun-20, 1:46 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 63

மேலே