உலகில் இன்று
பைத்தியங்களாய் உள்ளனர் நம்மவர்கள்
வைத்தியமின்றி பல நாள் மன நோயுக்கு
கைத்தளம் பற்றியே கண்காணிக்க வேண்டும்
தைத்துள்ள முள்ளை உடலிலிருந்து எடுப்பது போல்
வைத்தியம் செய்து பைத்தியம் களைதல் நன்று
திகைத்துப் போய் நின்றால் தெளிவு கிடைக்காது
வைத்து அதை மூடினாலும் வெடித்து வெளிவரும்
நைந்து சென்று அவர் நலங்காக்குதல் நலம்
சையென உதாசித்தால் மெய் பலங்கெடும்
ஐவரில் ஒருவருக்கு ஆட்கொள்ளும் இந்நோய்
கைக்கொள்ளும் மருந்தால் மனம் அமைதியடைந்தால்
வெய்யிலோன் போல ஒளி பெறும் வாழ்க்கை.
----- நன்னாடன்.