முதுமொழிக் காஞ்சி 93

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான். 3 தண்டாப் பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

ஒரு வித்தையைக் கற்றலை விரும்புகின்றவன் கற்பிக்கும் ஆசிரியனுக்குச் செய்யலான பணிவிடைகளைச் செய்யாமலிரான்.

வழிபாட்டின் இலக்கணம்:

அழலின் நீங்கான் அணுகான் அஞ்சி,
நிழலின் நீங்கான் நிறைந்த நெஞ்சமோடு,
எத்திறத் தாசான் உவக்கும்
அத்திறம், அறத்திற் றிரியாப்படர்ச்சி வழிபாடே.

'கற்றலிற் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று' என்றார் முன். ஆதலால் 'கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான்' என்றார் இவ்விடத்து.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Jun-20, 2:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 61

சிறந்த கட்டுரைகள்

மேலே