11 அவளுடன் பேசும்போது

___________________

சில கவிதைகளை ஒழுங்குபடுத்த அவளை வரச்சொல்லி கேட்டு இருந்தேன்.

எழுதிய கவிதைகளில் இன்னும் திருத்த வேண்டியது வரிகளில் செய்ய வேண்டிய மாற்றம், சொற்களின் கோர்வை, தகவல் பிழைகள் மற்றும் கருத்து பிழைகளை அகற்றல், வரிகளை முன் பின்னாய் பொருத்திப்பார்க்க வேண்டியது... இப்படி நிறைய இருந்தன.

ஸ்பரி....

வந்துவிட்டாள்.

காகிதங்களை எடுத்து வாசித்து உணர்ந்து பின்னர் ஒன்றாக அடுக்க ஆரம்பித்தாள். அவள் இப்படித்தான். தீர்மானங்களுடன் வாழ்பவள்.

தரையில் அமர்ந்து எழுந்து கொள்ளும் போதுகூட ஒரு ஒழுங்கும் நேர்த்தியும் வேண்டும் ஸ்பரி என்பாள்.

வீட்டு வாசலில் வரையப்பட்ட கோலங்கள் மீது மத்தியான நேரத்திலும் நடப்பவர் மீது அவளுக்கு மரியாதை இருந்ததில்லை.

அவளிடம் இயற்கையை ரசிக்க நான் சுற்றுலா போகிறேன் என்று யாராவது சொன்னால் விழுந்து விழுந்து சிரிப்பாள்.

தாள்களை ஒன்று திரட்டி கைகளுக்குள் மெதுவாய் சலிப்பது போல் அசைத்தாள். நான் அவளைப்பார்த்து சிரிக்கும்படி இருந்தது அந்த செயல்.

"ஏன் இப்படி?"

'இல்லை... ஒண்ணா சேர்த்து டேபிள் மேல வச்சு தட்டினா சத்தம் வருமே. இடிக்கிற மாதிரி இருக்கும். ஏன் ஸ்பரி... கேக்க அந்த சத்தம் நல்லாவா இருக்கும்.?"

இதுதான் அவள்.

அவளுடன் யாரும் பேசவோ பழகவோ ஒருபோதும் முடியாது என்ற தோற்றம். தோற்றம் மட்டும்தான்.

ஸ்பரி... இதில் நாம் என்ன செய்ய வேண்டும்.

அவளுக்கு ஒவ்வொன்றாக சொன்னேன்.

கடமைகள் என்பதும் கட்டுப்பட்ட சிந்தனைகள் என்பதும் வேலையென வரும்போது அவளிடம் வெறும் ஆர்வமாய் காரியத்தில் ஊக்கமாய் மட்டுமே மாறும். எந்த வேலையும் அவளை நிராகரிக்காது. உதவாத பொருட்களிலும் அவள் அழகை நிரப்பி விடுவாள்.

தேதிகள் பார்த்து எழுதப்பட்ட நேரங்களையும் குறித்துக்கொண்டு அவள் தனக்குள் தீவிரமாய் ஏதோ முடிவுகள் செய்து கொண்டிருப்பது தெரிந்தது.

இது போன்ற சமயங்களில் நான் பெரும் அமைதியாகி விடுவேன்.

"ஏன் ஸ்பரி... நீங்க எழுதற கவிதைக்கு தலைப்பே வைக்க மாட்டேங்கறீங்க"

உன் பெயரில் நீ என்பதும் உன் மனமும் எங்கே எப்படி இருக்கிறது என்று
கேட்டதும் அவள் என்னை நிமிர்ந்து பார்த்தாள்.

"எனக்கு புரியலை. ஸ்பரி... அப்படினா?"



__________
========
_______________

எழுதியவர் : ஸ்பரிசன் (2-Jul-20, 11:50 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 33

சிறந்த கட்டுரைகள்

மேலே