நகைச்சுவை துணுக்குகள் 16

கல்லூரி ஆசிரியர்: ஏன் இன்னிக்கி இவ்வளவு லேட்டா கிளாசுக்கு வர்ற?
மாணவி: என்ன ஒருத்தன் ஃபாலோ பண்ணிட்டே வந்தான் சார்!
ஆசிரியர்: அதனால என்ன?
மாணவி: அவன் ரொம்ப ரொம்ப மெதுவா நடந்து வந்தான் சார்!
******************
கல்யாணத்தைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?
அது ஒரு பாவமான செயலா நான் நினைக்கிறேன். அதனாலே வாழ்நாள் முழுவதும் நான் கல்யாணம் பண்ணிக்காதது மாத்திரம் இல்லை என் பிள்ளைகளுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன்னு உறுதியாச் சொல்றேன்.
*******************
ஏண்டா அழறே?
என் பொம்மை உடைஞ்சு போச்சு.
யார் உடைச்சா?
எதிர்த்த வீட்டு உமா.
அவ எப்படி உடைச்சா?
அவ தலையிலே ஓங்கி இந்த பொம்மையாலே அடிச்சேன். அவ தலையாலே இந்தப் பொம்மையை உடைச்சுட்டா.
அவங்க வீட்டு ஆட்கள் உன் தலையை உடைக்கிறதுக்குள்ளே உள்ளே ஓடிடு.
******************
அரசியல்வாதி: என்னை நீ இந்த விபத்திலிருந்து காப்பாத்திட்டே. உனக்கு ஏதாவது உதவி செய்யணும். என்ன வேணும்னு கேளு.
வாலிபன்: எனக்கு ஒரு வீல் சேர் வாங்கிக் கொடுங்க.
அரசியல்வாதி: உனக்குக் கைகாலெல்லாம் நல்லாத்தானே இருக்கு. எதுக்கு வீல் சேர்.
வாலிபன்: நான் யாரைக் காப்பாத்தினேன்னு எங்க அப்பாவுக்குத் தெரிஞ்சா, அப்போ எனக்கு வீல்சேர் தேவைப் படும்.
******************

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (3-Jul-20, 3:05 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 40

மேலே