வான் இடிந்து 1
("Arrival" திரைப்படத்தையும் "Story of your life" நாவலையும் தழுவி நான் எழுதியது)
#1 காரின் என்ஜின் சத்தமும் headlight வெளிச்சமும் ஓய்ந்து , எம் இதய இயந்திரங்களின் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த இரவு , மெதுவாக காரிலிருந்து இறங்கி நான் படிக்கட்டுகளில் ஏறி வீட்டுக் கதவை நோக்கி நடந்தேன் , பின்னால் உன் அப்பாவும் தொடர்ந்து வந்தார். நள்ளிரவைத்தாண்டி மணிமுற்கள் நகர்ந்து கொண்டிருந்தது , முழு நிலவு அதன் பூரண ஒளியில் திகழ்ந்தது . கதவினுள் திறப்பு நுழைந்து திரும்பும் சத்தம், எங்கள் காலாணிச் சத்தங்கள், கண்ணாடிக் கோப்பைக்குள் கடும் சிவப்பு வைன் பாயும் சத்தம் , அனைத்தும் இசையாகத் தோன்றியது . காலணிகளைக் களையவே, அவையும் சத்தம் சங்கடி அன்றி விலகின. வைனைத் துளித்துளியாய் அருந்திய வண்ணம் முன் முத்தத்தில் வந்து நின்று நிலவை ரசிப்பதுபோல் நடித்துக்கொண்டிருந்தேன் . பின்னாலிருந்து வந்து உன் அப்பா இறுக்கிக் கட்டியணைத்தார்.
"ஆடுவமா ?" என்றார்
நள்ளிரவில் நடனமா . தின்ற உணவின் சுவை நாவிலும், பார்த்த திரைப்படத்தின் இசை மனதிலும் ஒட்டிக்கொண்டிருந்தது . இருவரும் மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும் அந்த இசைக்கு கால்களை அசைத்தோம் . நீ பார்த்திருந்தால் "எதுக்கு நடுச்சாமத்துல ரெண்டுபேரும் exercise பண்றீங்கள்?" என்று நக்கலடித்திருப்பாய். யாருக்குத் தெரியும், அன்று நீ பார்த்துக்கொண்டுகூட இருந்திருக்கலாம். தூரத்தில் ஒரு நாய் ஊளையிடும் சத்தம் எம் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்த இசையை முறித்தது, இருவரும் விழுந்து விழுந்து சிரித்தோம் . நான் நிஜமாகவே hallஇற்குள் சென்று sofaமீது விழுந்து படுத்து சிரித்துக் கொண்டிருந்தேன். சிரித்த சிரிப்பில் என் அடிவயிரு நோகத்தொடங்கியது. வயிற்றைப் பிடித்துக்கொண்டேன், ஆனால் சிரிப்பு அடங்கவில்லை. உன் அப்பாவும் என் அருகில் வந்து படுத்துக்கொண்டார். என் வயிற்றின் மீது கைவைத்தார்
"உனக்கு அம்மா ஆகணும்னு ஆசையா இருக்கா ?"
எந்த மொழியில் புன்னகைக்கு "ஓம்" என்று அர்த்தம் என்று எனக்குத் தெரியாது. இருவரும் அந்த சிறிய sofaவில் விழாக்குறையாக அரும்பொட்டில் கிடந்தோம். ஒற்றையின் கடைசிவரியில் கஷ்டப்பட்டு செருகி எழுதும் வசனத்தைப்போல. அன்று இரவுதான் உன் கதை ஆரம்பமானது.
Based on the following para from “Story of your life” novel;
Your father is about to ask me the question. This is the most important moment
in our lives, and I want to pay attention, note every detail. Your dad and I have just
come back om an evening out, dinner and a show; it’s aer midnight. We came out
onto the patio to look at the full moon; then I told your dad I wanted to dance, so he
humors me and now we’re slow-dancing, a pair of thirtysomethings swaying back and
forth in the moon-light like kids. I don’t feel the night chill at all. And then your
dad says, “Do you want to make a baby?”