ஊர் பெயர்களும் அவற்றின் உண்மையான பெயர்களும்

இன்று நடை முறையில் இருக்கும் பல ஊர்களின் பெயர்கள் தெரிந்தோ , பொருள் சிதைந்தோ , சமஸ்கிருதமாக்கப்பட்டோ இருக்கின்றன . சில ஊர் பெயர்களையும் அவற்றின் தற்போதைய பெயர், உண்மையான பெயர் அவற்றின் பொருளையும் கீழே பாப்போம் .

சேலம் -- சரியான பெயர் சேரளம் -- மலைகள் சூழ்ந்த இடம் என்று பொருள்

எடப்பாடி - இடையர்பாடி -- இடையர்கள் -- ஆடு மாடு வைத்து வேளாண்மை செய்யும் மக்கள் நிறைந்த ஊர் . பாடி -- ஊர் அல்லது இடம் என்று பொருள் .

மாயவரம் -- மயிலாடுதுறை -- மயிலாடும் காவிரிக்கரையைக் கொண்ட ஊர்

ராமநாதாபுரம் -- முகவை -- வைகையின் முகத்துவாரத்தில் இருக்கு ஊர் என்பதால் முகவை என்று பெயர் . இதுவே பழைய சரியான தமிழ் பெயர் .

தனுஷ்கோடி -- வில்முனை என்பதே சரியான பழைய தமிழ் பெயர் . தனுஷ்கோடி எனது சான்ஸ்கிரிட் பெயர் . பிற்காலங்களில் வந்தது .

பொள்ளாச்சி --- பொழில் ஆட்சி என்பதே சரியான தமிழ் பெயர் , பின்னர் பொள்ளாச்சியாக மருவி விட்டது . பொழி -- எழில் - அழகு ஆட்சி செய்யும் இடம் என்பது பொருள் . இயற்கை அழகு சூத்து ஊர் , இன்றும் கூட . தமிழ் பெயர்கள் பொருள் சார்ந்தே , இயற்கை சார்ந்தே உருவாகி இருக்கின்றன . அதனால் தான் நினளித்து நிற்கின்றன .

சிவகங்கை -- செவ்வேங்கை -- செவ் வேங்கை மரங்கள் நிறைந்த ஊர் என்று பொருள் . இப்படித்தான் நம் இலக்கியம் இந்த ஊரை குறிப்பிடுகின்றன . இப்போது சிவகங்கை என்று மருவி இருக்கிறது என்ன கொடுமை . கங்கைக்கும் சிவகங்கைக்கு ஒரு தொடர்பும் இல்லை எனபதை நினைவில் கொள்ளுங்கள் .

மானாமதுரை --- வானான் மருத துறை -- மருத மரங்கள் , வானான் மக்களும் நிறைந்த ஊர் .

காளையார் கோவில் -- காளைப் பேறியியல்

திருவாரூர் --- ஆரூர் --- ஆறு என்றால் நண்டு .. நண்டு நிறைய இருக்கின்ற ஊர் .

திண்டிவனம் --- தில்லை வனம் -- தில்லை மரங்கள் நிறைந்திருந்த ஊர் .

வத்திராயிருப்பு -- வற்றாத ஆற்றுப்பரப்பு -- வைகை வற்றாமல் அந்த காலத்தில் ஓடி இருக்கவேண்டும் .

உடுமலைப் பேட்டை -- ஊடுமலைப் பேட்டை --மலைகளின் ஊடே இருக்கும் பேட்டை அல்லது ஊர் .

ஈரோடு -- இரண்டு ஓடை என்று சிலர் சொல்வதுண்டு . ஆனால் சரியான பெயர் ஈர ஓடை என்பதே . காவிரியின் ஈரம் எப்போதும் இருக்கும் என்பதால் இந்த பெயர் வந்தது . ஈர ஓடை என்பதே சரியான பெயர் .

ஹொகனேக்கல் -- புகைக்கல் , உருக்கும் கல் என்பதே சரி. தேவராயர் மற்றும் திப்பு காலத்தில் இந்த பெயர்கள் மாறி கன்னட பெயரான ஹொகனேக்கல் வந்து இடம் பிடித்துக் கொண்டது .

தருமபுரி --- தகடூர்

கல்பாக்கம் --- கயல் பாக்கம் -- மீன்கள் நிறைந்த கடலை அடுத்த முகத்துக்கவார ஊர் . கயல் -- மீன்

திருத்தணி -- திருத்தணிகை என்பதே சரி யான பெயர் .

கேரளா -- கேரளம் -- தென்னை மரங்கள் நிறைந்த ஊர் . கேர் ---- தென்னை

மலையாளம் -- மலையாளம் --- மலையின் ஆழமான பகுதியில் தோன்றிய மக்கள் பேசும் மொழி

விருத்தாசலம் -- முதுமலை -- சலம் என்றால் நீர் , சைலம் என்றால் -- நீரற்ற கெட்டியான மழைப் பகுதி . சலம் மற்றும் அசலம் இரண்டும் பழந்தமிழ் வார்த்தைகள் . இலக்கியங்களில் காணப்படுகின்றன . இந்த இரண்டுக்கு சொல்லும் காலப்போக்கில் சமஸ்கிருத்தத்தில் சேர்க்கப்பட்டு அவை முறையே சலம் ---ஜாலமாகவும் , அசலம் -- அச்சலம் ஆகவும் மாற்றம் பெற்றனர் என்பதை அறியவும் .

வேதாரண்யம் -- திருமறைக்காடு

நயனப்பிரியாள் --- நாயகனைப் பிரியாள்

குடியாத்தம் -- குடியேற்றம்

ஆண்டிமடம் --- ஆண்டவர் மடம்

மற்றவற்றை அடுத்த கட்டுரையில் காண்போம் .

எழுதியவர் : வசிகரன்.க (5-Jul-20, 12:09 pm)
பார்வை : 293

சிறந்த கட்டுரைகள்

மேலே