போராடுகின்றேன்

வாலிபப் பராயத்தில் வண்ண வண்ண
கனவுகள் வாழ்க்கையில் வந்து போவதுண்டு
வரையறையில்லாக் கற்பனையில் மனம்
மிதந்து போவதுண்டு

என் வாழ்க்கை மட்டும் ஏனோ
எதிர்மறையானது துளி கூட
ஒளி இல்லா வானமாக தடம்
மாறிப்போனது

நடந்து வந்த பாதைகளோ
நந்தவனம் காணாத நெருஞ்சி முள்
காடுகளே பாதைகளை சீரமைக்க
பக்குவமோ எனக்கில்லை

நேசம் காட்ட வேண்டிய உறவுகளும்
துரோகத்திற்கே துணை போனது
பாசத்தை பொழிந்த மனமோ
மவுனமொழி பேசியது

மண வாழ்க்கையோ மணக்கும்
என்றால் அதுவும் துருப்பிடித்து
தகடானது தட்டிப் பழுது பார்த்தேன்
என் கையே எனக்கு உதவி

கண்டேன் பல சந்தோசங்களை அதை
கொள்ள கொடுத்த விலைகளோ மிக அதிகம்
செதுக்கி சீரமைக்க எடுத்ததோ பல
வருஷங்கள் இவை எல்லாம் கூடும்போது

இளமை மறைந்து முதுமை தோன்றியது
இன்றும் பழையபடி போராடுகிறேன்
என்னை சுற்றி ஏதும் சந்தோசங்கள்
நடக்காதா என்று ஏங்குகின்றேன்

முத்தான மூன்று பொக்கிஷங்கள் என்
வாழ்க்கையில் இறைவன் எனக்களித்த
ஈடில்லா சொத்துக்கள் இவையென்று
சொத்துக்கள் நிழலில் மிகப் பற்றோடு
வாழுகிறேன்

எழுதியவர் : Ranjeni K (6-Jul-20, 3:36 pm)
சேர்த்தது : Ranjeni K
பார்வை : 317

மேலே