படைத்ததும் படைத்தாய்

படைத்தவனே படைத்தவனே பலம் வாய்ந்த படைத்தவனே
படைக்கப்பட்ட நின் மக்கள் பாடுதன்னை அறிவாயோ
கேடு நிறைந்த பசி தன்னை கூட்டினுள் வைத்தது ஏன்
தேடி தினம் திண்றாலும் மறையாமல் இருப்பது ஏன்
உணவுக்காக உடல் உழைத்து கேடுகளை அடைவது ஏன்
உணவுத் தேட மறுத்தவனால் பணம் படைக்கப்பட்டது ஏன்
பணத்தின் மேல் மோகம் கொண்டு அரிதானதை அழித்தது ஏன்
அரிதானதின் அருமை மறந்து ஆர்ப்பாட்டம் செய்வது ஏன்
நிலையான பொருளின் மீது பல விலைகள் வைத்தது ஏன்
தர்மம் அதனின் தரம் மறந்து வியாபாரங்கள் செய்வது ஏன்
அறிவியலின் பெயராலே அற்புதங்களை தொலைப்பது ஏன்
காமம் நிறைந்த உடல் தன்னை மானிடருக்கு கொடுத்தது ஏன்
கர்ணகொடூர தவறு செய்யும் எண்ணந்தன்னை புகுத்தியதேன்
மண்ணில் மனிதனை படைத்ததனால் மாண்பு கெட்டுபோயிடுச்சே
மாற்றியமைக்க என்ன செய்வாய் மாண்புமிகு படைத்தவனே.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (8-Jul-20, 9:34 pm)
பார்வை : 87

மேலே