வீடும் முறையும்
கொக்கு கூடுகட்டும் குயில் அதை செய்யாது
காடை பொந்தில் தரையில் வாழும் கௌதாரியும் அது போலே
மரங்கொத்தி துளையிடும் கிளி வந்து அதில் வாழும்
தூக்கணாங்குருவி எல்லாம் கிளையில் கூடு கட்டாது சிட்டுக் குருவிக்கோ கூடு கட்ட சுவரில்பொந்து வேணும்
மீன்கொத்திப்பறவையோ நீர் நிலையின் அருகில் கட்டும்
காகம் கருடன் எல்லாம் குச்சி கொண்டு கூடுகட்டும்
அணிலின் கூடு மட்டும் பஞ்சு போல் விம்மியிருக்கும்
எலியின் வலையினிலே ஏகப்பட்ட அறை இருக்கும்
தேகம் பெருத்த பிராணிக்கோ தேவைக்கு வீடு இல்லை
மனிதன் மட்டும் மாறுபட்டான் மனம்போல வீடு கொண்டான்
------ நன்னாடன்.